மாமாடா... மாப்பிள்ளைடா... சந்து கேப்பில் சிந்து பாடிய புத்திசாலித்தனம்!
புதிய டிரெய்லர் வெளியிட்டு மாப்பிள்ளை நடிகர் மாமாவின் அரசியல் பிரவேசத்திற்கு உதவியுள்ளார் மாப்பிள்ளை.
சென்னை: தனக்கு வியாபாரமும் ஆயிற்று, மாமாவிற்கு அரசியல் விளம்பரமும் ஆயிற்று என சரியான நேரத்தில் புதிய டிரெய்லரை வெளியிட்டுள்ளார் மாப்பிள்ளை நடிகர்.
தூத்துக்குடி துயர சம்பவத்தால் பலரும் தங்களது டிரெய்லர்களை வெளியிட தயங்கி பின் வாங்கிவிட, அதிரடியாக தன் மாமா பட டிரெய்லரை நேற்று வெளியிட்டார் மாப்பிள்ளை. அரசியல் பிரவேசம் செய்துள்ள மாமாவிற்கு இது பின்னடைவாக போய்விடக் கூடாதே என அவரது ரசிகர்கள் ஆரம்பத்தில் தயங்கினர்.

ஆனால், அதிரடியாக தூத்துக்குடி சம்பவம் போன்றே கலவரம், போலீஸ் தடியடி போன்ற காட்சிகளைக் கொண்டு, அதன் பின்னணியில் நாயகன் அதிரடி பஞ்ச் பேசுவது போன்ற டிரெய்லரை வெளியிட்டு அசரடித்து விட்டார் படத்தின் தயாரிப்பாளரான மாப்பிள்ளை.
இதனால் டிரெய்லர் செம ஹிட். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என படத்திற்கு புரோமோஷனும் ஆயிற்று, மாமாவின் அரசியல் பிரவேசத்திற்கு ஒரு விளம்பரமும் ஆயிற்று.
மாப்பிள்ளையின் இந்த புத்திசாலித்தனத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











