ரீல் காதலர் மீது கடும் கோபத்தில் நம்பர் நடிகை... காரணம் இது தான்!
நம்பர் நடிகை பட ரிலீஸ் பிரச்சினையால் தனது ரீல் காதலர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.
Recommended Video

சென்னை: தமிழின் நம்பர் ஒன் நடிகை என தைரியமாகச் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார் பெரிய நம்பர் நடிகை.
தொடர்ந்து தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வரும் அவர், வேர்ல்டு நடிகருக்காகவும், ஹெட் நடிகருக்காகவும் தன் பிடிவாதத்தை தளர்த்தியுள்ளார். இவர்கள் படங்களில் நாயகிக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது என்று தெரிந்தும், பெரிய நடிகர்கள் என்பதால் சம்மதித்தார்.
இது ஒருபுறம் இருக்க, இரண்டாம் பாகமாகத் தயாராகி வரும் படத்தில் நடித்து வரும் நடிகை, தனது ரீல் நடிகர் மீது செம கடுப்பில் இருக்கிறார்.

ரிலீஸ் மாற்றம்:
காரணம் முதலில் இருவர் நடித்த படங்களும் ஒரே தேதியில் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது தியேட்டர் பிரச்சினையால் வேறு வழியில்லாமல் நடிகையின் படம் ஒரு வாரம் பின் வாங்கி ரிலீசாகிறது.

அதிக தியேட்டர்கள்:
உண்மையைச் சொல்லப்போனால், நடிகரின் படத்தை விட, அம்மணியின் படத்திற்கே எதிர்பார்ப்பு அதிகம். பாடல்களும் வைரலாகியுள்ளன. இதனால், அதிக தியேட்டர்கள் நடிகையின் படத்திற்கே கிடைத்துள்ளது. நடிகருக்கு சொற்ப தியேட்டர்கள் தான் கிடைத்தது.

கோபத்தில் நடிகை:
இரண்டு படங்களின் தயாரிப்பும் ஒரே நிறுவனம் என்பதால், இது குறித்து மேலிடத்தில் பேசிய நடிகர், நடிகையின் பட ரிலீஸ் தேதியை மாற்றச் செய்து விட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தன் பட ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதால், நடிகர் மீது செம கோபத்தில் இருக்கிறார் நடிகை.

வெயிட் அண்ட் ஸீ:
தற்போது இவர்கள் இருவரும் நடித்து வரும் படத்தின் இயக்குநர், படத்தை டக்கென முடித்து விடும் வகையைச் சேர்ந்தவர் அல்ல. எப்படியும் வருடக்கணக்கில் இழுத்து விடுவார். இதனால், நடிகர் மீதான கோபத்தை நடிகை கால்ஷீட் விசயத்தில் காட்ட அதிகம் வாய்ப்பிருப்பதாகக் கிசுகிசுக்கப்படுகிறது கோலிவுட் வட்டாரத்தில்.


Click it and Unblock the Notifications











