'ஒரே ஒரு ப்ரோகிராம் பண்ணிட்டு நான் படுற பாடு இருக்கே அப்பப்பா'... கவலையில் பிக்கப் நடிகர்!
சென்னை: போகும் இடமெல்லாம் பிக்கப் டிராப் நடிகரை 'மாப்பிள்ளை' நிகழ்ச்சியை வைத்துத் தான் கலாய்க்கிறார்களாம். இதனால் வெளியில் சிரித்துக் கொண்டாலும், நடிகர் உள்ளே கொஞ்சம் அப்செட் தானாம்.
ஏற்கனவே பிக்கப் டிராப்புக்கு பேர் போனவர் அந்த நடிகர். முன்பெல்லாம் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அதை வைத்துத் தான் அவரைக் கலாய்ப்பார்கள். ஒவ்வொரு முறையும் புதுப்புது நடிகையின் பேருடன், நடிகரின் பேரும் அடிபடும். எனவே, அவற்றை அவர் ஜாலியாக எடுத்துக் கொள்வார்.
ஆனால் இப்போது நிலைமை தலைக்கீழ். செல்லும் இடமெல்லாம் 'அந்த பாம்பு புத்துக்குள்ள கையவிட்டது நீங்கதானே' என்ற ரேஞ்சுக்கு அவரது மாப்பிள்ளை புரோகிராமை வைத்து தான் கலாய்க்கிறார்கள். இதில் பெரிய கொடுமை என்னவென்றால், மேடை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்கள் முதல் சிறப்பு விருந்தினர்கள் வரை நடிகரின் நிகழ்ச்சியை பற்றி மறக்காமல் குறிப்பிடுகின்றனர்.
இதனால் மேடைகளில் நடிகர் நெளிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. 'அவனவன் ஆயிரம் புரோகிராம் பண்ணிட்டு அமைதியா இருக்கான். ஒரேயொரு நிகழ்ச்சியில் வந்துட்டு நான் படுகிறபாடு இருக்கே... அப்பப்பா' என தனக்கு தெரிந்தவர்களிடம் புலம்பி வருகிறார் நடிகர்.


Click it and Unblock the Notifications











