பிருத்விராஜின் 'பிக்கப், டிராப்'!!
| Click here for more images |
பிருத்விராஜைப் பற்றி மலையாளத்தில் நிறைய வதந்திகள் வந்ததுண்டு. தமிழ் சினிமாவில் இதுவரை வந்ததில்லை. ஆனால் முதல் முறையாக அவரைப் பற்றி சூடான ஒரு வதந்தி கிளம்பி உலா வந்து கொண்டுள்ளது.
மலையாளத்தில் பிருத்விராஜ் அறிமுகமாகியபோது அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. வாரிசு நடிகரான பிருத்விராஜ் குறுகிய காலத்தில் மலையாளத்தில் முன்னணி ஸ்டாராக மாறினார். இருந்தாலும் மம்முட்டி, மோகன்லால், திலீப் வரிசையில் அவரால் சேர முடியவில்லை.
இந் நிலையில்தான் தமிழில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆரம்பத்தில் தமிழ் வாய்ப்புகளை பெரிய அளவில் விரும்பவில்லை பிருத்விராஜ். ஆனால் தனக்கு தமிழில் கிடைத்த வரவேற்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போன பிருத்விராஜ் தொடர்ந்து தமிழில் நடிக்கத் தயாரானார்.
இளம் நடிகராச்சே, வதந்திகள் வராமல் இருக்குமா. பிருத்விராஜையும் வதந்தி அலை தாக்கியது. முன்பு மீரா ஜாஸ்மினுடன் இணைத்துப் பேசப்பட்டார். பின்னர் சந்தியாவுடன் இணைத்துப் பேசப்பட்டார். இப்போது தமிழில் அவர் நடித்து வரும் படத்தின் நாயகியுடன் இணைத்து பலமாக கிசுகிசுக்கப்படுகிறார்.
பிருத்விராஜ் புதிதாக நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நாயகி ஒருவர் நடிக்கிறார். இருவருக்கும் இடையே நல்ல நட்பு உருவாகியுள்ளதாம். தினசரி படப்பிடிப்பு முடிந்ததும் ஒரே காரில் பயணிக்கிறார்களாம்.
பிருத்விராஜ் தங்கியிருக்கும் ஹோட்டலில் விடிய விடிய கதை பேசுகிறார்களாம். அதிகாலையில்தான் நாயகியை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலில் போய் டிராப் செய்கிறாராம்.
படு சூடான இந்த கோலிவுட் வதந்தியை பிருத்விராஜ் கண்டு கொண்டது போல இல்லை. எத்தனையோ வதந்திகளில் இதுவும் ஒன்று என்ற அளவுக்கு அவர் தனது நட்பில் படு தீவிரமாக இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











