அய்யோ போச்சே.. ரூ200 கோடி புராஜெக்ட் போச்சே.. காதல் கணவர் டைரக்டர் மீது காண்டான நடிகை மனைவி

ரூ200 கோடி புராஜெக்ட்டை பறிகொடுத்த இயக்குநரின் பரிதாபம் இது.

By staff

சென்னை: ரூ200 கோடி புராஜெக்ட்டை அசால்ட்டாக இழந்துவிட்டு இப்படியா நிற்பது? என காதல் கணவரான டைரக்டர் மீது நடிகை மனைவி செம்ம காண்டாகி இருக்கிறாராம். லட்டு மாதிரி கிடைத்த புராஜெக்ட்டை அசடு மாதிரி விட்டுக் கொடுத்தால் எந்த வீடுதான் பற்றி எரியாமல் இருக்கும்?

மாஸான அறிவிப்பு.. செம்ம மாஸான தயாரிப்பு.. அப்படி ஒன்னும் பெரிய டைரக்டரு இல்லைதான்.. ஆனாலும் வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனம் ரூ8 கோடியை அள்ளி கொடுத்தது..

சும்மா எப்படி ரூ8 கோடியை கொடுப்பாங்க? காரணமே மாஸ் ஆக்டர் மீதும் நடிகை மனைவி மீதும் தயாரிப்பு வைத்திருந்த அபார நம்பிக்கைதான். உண்மையை சொல்வதானால் நடிகை மனைவிக்காகவே தயாரிப்பு தரப்பு டைரக்டரை ஓகே சொன்னது.

Gossip on Tamil Film Directors Rs200 Cr Project

ரூ8 கோடியை வாங்கிய டைரக்டர் தரப்போ வெட்டி செலவு செய்வதில்தான் படுதீவிரமாக இருந்ததாம்.. மாஸ் நடிகருக்கும் தயாரிப்புக்கும் சொன்ன கதையை ஒழுங்குபடுத்தவோ அது தொடர்பான டிஸ்கஸ் மீட்டிங்குகளோ நடத்தவே இல்லையாம். ஒரு குப்பையான கதையை கையில் வைத்துக் கொண்டுதான் அந்த டைரக்டர் இப்படி பிலிம் காட்டினாராம்.

இதனால் மாஸ் நடிகரும் தயாரிப்பு தரப்பும் ஒரு கட்டம் வரை ரொம்பவே பொறுமையாக இருந்தனர்.. அதற்கும் நடிகை மனைவி மீதான மார்க்கெட் மரியாதைதான். பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா என முதலில் சீறியது தயாரிப்பு தரப்பு. இதற்கு இணையாகவே சிலிர்த்தது மாஸ் நடிகர் தரப்பு.

அப்பதான் தெளிந்தவராக நிலைமையின் விபரீதத்தை புரிந்து கொண்டு தயாரிப்பு ஆபீசுக்கு ப்ளைட் பிடித்து போனாராம் டைரக்டர் சார். ஆனால் அனலிடை புழுவென தகித்த தயாரிப்பு , சிலோன் கொத்து பரோட்டா போடாத கதையாக விளையாடிவிட்டதாம். போதாகுறைக்கு மாஸ் நடிகரே களத்துக்கு வந்துவிட நடுங்கிப் போனதாம் டைரக்டர் தரப்பு. ஆனாலும் பாருங்க.. நடிகை மனைவியை விட்டு சமாதானம் பேசிப் பார்த்தாராம் நம்ம டைரக்டர். இதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை.

Gossip on Tamil Film Directors Rs200 Cr Project

ஒருவழியாக கைக்கு லட்டு மாதிரி வந்த ரூ200 கோடி புராஜெட்க் அம்பேல்! சுபம் போட்டாச்சு! இதனால் வெளியே காட்ட முடியாத நிலையில் டைரக்டர் மட்டும் அல்ல..அவரது நடிகை மனைவியும் இருக்கிறாராம்.. வந்து விழுகிற போன்கால்களுக்கு பதில் சொல்ல மாள முடியலையாம் நடிகை மனைவிக்கு... அப்புறம் என்ன கோபத்தை காட்ட வேண்டிய இடத்தில் நிமிடம் பாக்கி இல்லாமல் கொட்டுகிறாராம். அப்படி தேள் கொட்டுவது போல தடிக்கும் வார்த்தைகள் அப்படியே இன்டஸ்ட்ரியிலும் அரசல் புரசலாக வலம் வர அந்த டைரக்டர் சாருக்கு நிக் நேமாகவே அந்த தடித்த வார்த்தைகள் செட்டாக்கப்படுகிறதாம்! அய்யோ பாவமே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X