திடீர் மதமாற்றம்… அடுத்த திருமணமா? …கலாய்க்கும் நெட்டிசன்ஸ் !
சென்னை : திடீரென மதமாறிவிட்டதாக கூறி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள நடிகையை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
பழம் பெரும் நடிகரின் வாரிசான இந்த நடிகை சர்ச்சைக்கு சிறிதும் குறைவில்லாதவர்.
ஓரிரு படங்களில் மட்டுமே நடித்திருந்த இந்த சர்ச்சை நடிகை குடும்ப சண்டையை வீதிக்கு இழுத்ததால், குடும்பமே இவரை ஒதுக்கிவைத்துவிட்டது. தற்போது குடும்பத்தை விட்டு பிரிந்து தன் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

சர்ச்சை நடிகை
இந்த சர்ச்சை நடிகை பிரபல ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதை அடுத்து அவருக்கு பெயரும் புகழும் குவிந்தது. இதையடுத்து ஒரு சில திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து பிஸியான அந்த சர்ச்சை நடிகை, என் வாழ்க்கைக்கும் என் குழந்தைகளுக்கும் ஒரு துணை தேவை எனக்கூறி மீண்டும் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த வாழ்க்கையும் சரியாக அமையவில்லை என்று கூறி கண்ணீருடன் யூடியூபில் கதறினார்.

ஒரே அட்டகாசம்
இதையடுத்து, ஓடிடியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவிற்கு சென்றார். ஆடுன காலும்... பாடுன வாயும் சும்மா இருக்குமா ? என்ன அங்கே போயும் ஓவரா பேசி, ஒரே அட்டகாசம் செய்து பிரச்சினையை கிளப்பினார். இதையடுத்து, அந்த நிகழ்ச்சியில் இருந்த போட்டியாளர்கள் மீது பல குறைகளை கூறிவிட்டு தானாக வெளியேறினார்.

நக்கலடித்து வருகின்றனர்
தற்போது இந்த சர்ச்சை நடிகை, அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ மதம் மாறிவிட்டதாக கூறியுள்ளார். திடீரென இந்த சர்ச்சை நடிகை மதம் மாறியது குறித்து ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் பலர், அமைதிக்காகவா... நீங்களா.. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என்றும், ஒரு வேளை அடுத்த திருமணமா என நக்கலாடித்து வருகின்றனர்.

ஜாலி டூர்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்த சர்ச்சை நடிகை 10க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும், சொந்தமாக யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். தற்போது தாய்லாந்திற்கு ஜாலி டூர் போய் உள்ளார்.


Click it and Unblock the Notifications