ஹிட் கொடுத்தும் மதிக்காத மாஸ் நடிகர்... முடிவு எடுக்க முடியாமல் திணறும் இயக்குநர்!
சென்னை: தமிழ் சினிமாவில் மாஸ் நடிகரான அவருக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் படம் எப்போது வரும், தியேட்டரில் சென்று எப்படி அலப்பறை செய்யலாம் என இவர் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தாலும், அந்த மாஸ் நடிகருக்கு அதைப்பற்றி எல்லாம் கவலையே இல்லாமல், துபாயில் இருக்கிறார். ஆனால், இவரை வைத்து அடுத்த படத்தை இயக்க இருக்கும் இயக்குநருக்குத்தான் வயிற்றில் நெருப்பை கட்டியது போல பயத்தில் இருக்கிறார்.
கோலிவுட் சினிமாவில் இந்த மாஸ் நடிகரின் படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகவே இல்லை. இவரின் ரசிகர்களோ, போகிற இடம் எல்லாம், படத்தின் அப்டேட்டை கேட்டு கேட்டு மற்றவர்களை கடுப்பாக்கி வந்தனர். இதையடுத்து, ரசிகர்களுக்கு போனஸ் கொடுத்தது போல, இந்த ஆண்டு அந்த மாஸ் நடிகர் நடித்த இரண்டு படம் வெளியானது. அதில், ஒரு படம் மொத்தமாக கவுத்துவிட்டது. அந்த படத்தில், அந்த மாஸ் நடிகர் ஒப்புக்கு நடித்தது போல இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள், இது என்னடா கொடுமை, இதுக்குத்தான் இத்தனை நாட்கள் காத்து இருந்தோமா என திட்டி தீர்த்துவிட்டார்கள்.

மாஸ் நடிகர்: அதன்பின், ரசிகர்கள் கொண்டாடும் வகையில், அவரின் தீவிர ரசிகரான இயக்குநர், ரசித்து ரசித்து படத்தை எடுத்து செதுக்கி இருந்தார். அந்த படத்தில், அந்த மாஸ் நடிகரைப் பார்த்து இதுதான்டா படம் என ரசிகர்கள் அனைவரும் தியேட்டரிலேயே கொண்டாடினார்கள். அந்த படத்தை தொடர்ந்து, அந்த மாஸ் நடிகர் எந்த படத்தில் நடிக்க போகிறார், அடுத்த இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மாஸ் நடிகரின் அடுத்த படத்தையும் பான் பாய் இயக்குநர் தான் இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாக வில்லை.
அதே போல, மாஸ் நடிகர் படம் என்பதால், நானும் போனேன் மாங்கா தோப்புக்கு என்பது போல போய்விட முடியாது. மாஸ் ஹீரோகே கோடியில் சம்பளம் தர வேண்டும், அதோடு மட்டுமில்லாமல் ஹீரோயின் மற்ற நடிகர்கள் என படத்தின் செலவு பல கோடியாகி விடும், இவை அனைத்தையும் தாக்குபிடிக்கும் அளவிற்கு ஒரு தயாரிப்பு நிறுவனத்தை. பான் பாய் இயக்குநர் அலைந்த திரிந்து, கடைசியாக ஒரு தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது. ஆனால், அந்த மாஸ் நடிகரின் ஒப்புதல் இல்லாமல்,பான் பாய் இயக்குநரால் எதையும் செய்ய முடியாது என்பதற்கான அவரின் ஒப்புதலுக்காக காத்து இருக்கிறார்.
பயத்தில் இயக்குநர்: ஆனால், மாஸ் நடிகரோ, சினிமாவை பற்றி கவலைப்படாமல், தனது லட்சியம், ஆசை தான் முக்கியம் என்று துபாயில் இருக்கிறார். பான் பாய் இயக்குநர் எத்தனை முறை தொடர்பு கொண்டும், மாஸ் நடிகர் போனை எடுப்பதே இல்லையாம். நவம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க இயக்குநர் திட்டமிட்டு இருந்த நிலையில், எதைப்பற்றியும் கவலைப்படாமல், தன் இஷ்டத்திற்கு இருக்காராம் அந்த மாஸ் நடிகர். ஆனால், இயக்குநருக்கோ கதையை சொல்ல வேண்டும், அதற்கான வேலைகளை ஆரம்பிக்க வேண்டும், நடிகர்களை தேர்வு செய்ய வேண்டும் இப்படி பல பிரச்சனை இருக்கிறது. இது எதையுமே அவரின் அனுமதி இல்லாமல் செய்ய முடியாததால், முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகிறார் இயக்குநர்.


Click it and Unblock the Notifications











