இனி அப்படி நடிச்சா அவ்வளவுதான்?.. நெருக்கம் என்ன ஓவரா போகுது?.. நடிகைக்கு நடிகரின் குடும்பம் ரெய்டு

By Staff

சென்னை: இந்திய அளவில் இப்போதைக்கு ஃபேமஸாக இருப்பவர் அந்த நடிகை. காவிரி தேசத்தில் பிறந்து அக்கட தேசத்தில் ஃபேமஸான அந்த நடிகையின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மெகா ஹிட்டாகியிருக்கிறது. அந்தப் படத்தில் இடம்பெற்ற காட்சிகளிலும், பாடல்களிலும் ஹீரோவுடன் அம்மணி ஓவர் நெருக்கம் காட்டி நடித்திருக்கிறார். இதற்கிடையே அவர் இன்னொரு நடிகரை காதலித்துவருகிறார். படத்தில் ஹீரோவுடன் அம்மணி நெருக்கமாக நடித்ததை பார்த்து நடிகரின் குடும்பம் காண்டாகிவிட்டதாம்.

நேஷனல் அளவில் இப்போது ஃபேமஸான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் அவர். கிளாமர் ரோலுக்கு எந்தவித தயக்கமுமின்றி ஓகே சொல்லி நடிக்கும் அம்மணி; ஹிந்தி படத்தில் நடித்து பெயர் வாங்கினாலும் அந்த ரோலில் நடித்திருக்க வேண்டாமோ என்று இப்போது ஃபீல் செய்தும் வருகிறாராம். இப்படிப்பட்ட சூழலில்தான் கடைசியாக ஒரு படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டாகியிருக்கிறது. போகிறபோக்கை பார்த்தால் அந்தப் படம் அனைத்து படங்களின் வசூல் சாதனையையும் முறியடிக்கும் நிலையில்தான் இருக்கிறது.

gossip tamil cinema

ஓவர் கிளாமர்: இந்தப் படத்தில் பெரிதாக கதை எதுவும் இல்லையென்றாலும் மாஸ் சீன்களாலும், நடிகையின் கிளாமராலும் படம் தப்பித்துவிட்டதாகவே சொல்கிறார்கள் திரைத்துறையினர். அதன்படிதான் நடிகையும் இந்தப் படத்தில் ஓவர் கிளாமர் காண்பித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் ஏடாகூடமான நடன அசைவுகள், படுக்கையறை காட்சிகளில் உச்சக்கட்ட நெருக்கம் என்று அடித்து பட்டையை கிளப்பியிருக்கிறார். இது பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

ஒர்க் அவுட்டான கெமிஸ்ட்ரி: இதற்கிடையே இன்னொரு நடிகரை தீவிரமாக காதலித்துவருகிறார் அம்மணி. இரண்டு பேரும் ஒரே வீட்டில்தான் வசித்துவருகிறார்கள். இது திரையுலகில் கிட்டத்தட்ட பலருக்கும் தெரிந்த விஷயம்தான் என்றாலும் ஹீரோவும், ஹீரோயினும் அதை இன்னமும் ஓபனாக சொல்லாமல் இருக்கிறார்கள் அவ்வளவுதான். மேலும் இவர்களது காதலுக்கு இரண்டு குடும்பத்தினரும் சம்மதமும் தெரிவித்துவிட்டார்களாம்.

அந்த நடிகருடன் வேறு?: சூழல் இப்படி இருக்க கடைசியாக நடித்த படத்தில் அந்த ஹீரோவுடனும் நடிகைக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டதாக படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தபோதே சொன்னார்கள் பலர். ஆனால் இது உண்மையாக இருக்காது என்றுதான் நடிகையின் காதலரும், காதலரின் குடும்பமும் ஆணித்தரமாக நம்பியதாம். மேலும் தங்களிடம் அந்த விஷயம் பற்றி சொன்னவர்களை லெஃப்ட் அண்ட் ரைட்டும் வாங்கி; நடிகையை பற்றி எங்களுக்கு தெரியும் என்று சொல்லி பேசியவர்களின் வாயை அடைத்துவிட்டார்களாம்.

ரெய்டு விட்ட குடும்பம்: ஆனால் தன் காசில் தனக்கே சூனியம் வைத்துக்கொண்டதை போல நடிகை ஒரு விஷயத்தை செய்தார். அதாவது நடிகரின் குடும்பத்தோடு தான் நடித்த படத்தை பார்த்தாராம் நடிகை. அப்போது நடிகரின் குடும்பத்தினர்; நடிகையும், படத்தின் ஹீரோவும் ஓவர் நெருக்கமாக இருந்ததை பார்த்து ஷாக்காகிவிட்டார்களாம். படம் முடித்து வீட்டுக்கு வந்ததும் குடும்பத்தினர் நடிகைக்கு செம ரெய்டு விட்டுவிட்டார்களாம். அதாவது, மற்றவர்கள் சொன்னபோதுகூட நாங்கள் நம்பவில்லை. படத்தை பார்த்த பிறகுதான் புரிகிறது.

ஒருவேளை அவர்கள் சொன்னது உண்மைதானோ என்று இப்போது எங்களுக்கு தோன்றுகிறது. எதற்காக அப்படி நடித்தாய் என்று விளக்கமும் கேட்டார்களாம். அதற்கு நடிகையோ கலங்கியபடி கதைக்காகத்தான் என்று கூற; இந்த நொண்டி சாக்கெல்லாம் வேண்டாம். இனி அந்த நடிகருடன் இவ்வளவு நெருக்கமாக நடித்தால் உன் காதலரை மறந்துவிடு என்று எச்சரிக்கையும் கொடுத்திருக்கிறார்களாம். இந்த விவகாரத்தை நடிகரிடம் கொண்டு சென்ற நடிகைக்கு மேலும் ஷாக்காம். அதாவது அந்த நடிகரோ, தன்னால் பேச முடியாததை அவர்கள் பேசியிருக்கிறார்கள். அவர் சொல்படி நடந்தால் நமது திருமணம் நடக்கும் என்று கூறிவிட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X