ஒரே நேரத்தில் இரண்டு ஹீரோக்கள்.. ஹோட்டல் அறையில் கையும் களவுமாக சிக்கிய டாப் நடிகை?

By Staff

சென்னை: கோலிவுட்டில் கடந்த பல வருடங்களாகவே இந்த நடிகையின் ஆட்சிதான் நடந்துவருகிறது. ஏகப்பட்ட விமர்சனங்களையும் சோதனையையும் கடந்து வந்திருக்கும் அந்த நடிகை இப்போதும் பிஸியாகவே நடித்துவருகிறார். சமீபத்தில்கூட அவரது நடிப்பில் வெளியான படம் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றது. இப்போது அவரை சுற்றிய சர்ச்சைகள் ஓய்ந்திருந்தாலும் புது விஷயம் ஒன்று அவரைப் பற்றி கிசுகிசுக்கப்படுகிறது. அதுதான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக உலா வந்துகொண்டிருக்கிறது.

ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்பவர் அந்த நடிகை. ஹோம்லி கேரக்டர், கிளாமர் கேரக்டர் என எதை கொடுத்தாலும் கனகச்சிதமாக செய்யும் வல்லமை படைத்த அவர்; தான் அறிமுகமான சில காலத்திலேயே முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க ஆரம்பித்தார். அதுமட்டுமின்றி ஒரு நடிகை இப்படி இருந்தால்தான் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்ற கூற்றையும் உடைத்து காண்பித்தவர் அவர்.

Gossip Tamil Cinema

நடிகை மீது கண்: இதற்கிடையே கஷ்டங்களை சந்தித்து நடிகரான ஒருவர் மிகச்சிறந்த நடிகர் என்ற பெயரை இன்றளவும் வைத்திருப்பவர். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அசால்ட்டாக தட்டி தூக்கும் அந்த நடிகருக்கு இந்த நடிகை மீது ஒரு கண் இருந்துகொண்டே இருந்ததாம். ஏற்கனவே இருவரும் இணைந்து ஒரு படத்தில் படு நெருக்கமாக நடித்திருந்தார்கள். அப்போதே இருவரும் ஆஃப் கேமராவிலும் நன்றாக பழகுவார்களாம். அந்தப் படத்திலிருந்து டாப் நடிகையாகவே வலம் வர ஆரம்பித்தார் நடிகை.

பொருந்திப்போன கெமிஸ்ட்ரி: சிறந்த நடிகருடன் நடித்துவிட்டு மாஸ் நடிகருடனும் நடிக்க ஆரம்பித்தார் நடிகை. இருவருக்கும் முதல் படத்திலிருந்தே கெமிஸ்ட்ரி பக்காவாக பொருந்திப்போனது., இதன் காரணமாக நடிகருக்கும், நடிகைக்குமான நெருக்கம் கேமரா ஆஃப் ஆன பிறகும் அதிகமாக தொடங்கியது. இப்படி இருவரும் நெருக்கமாக இருப்பதாக பத்திரிகையில் வந்த கிசுகிசுக்கள் சிறந்த நடிகரின் ஈகோவை தூண்டியதாம். எனவே எப்படியாவது நடிகையை தனது வலையில் விழ வைத்துவிட வேண்டும் என்று கணக்கு போட்டாராம்.

பச்ச தண்ணி பத்திக்கிச்சு: சூழல் இப்படி இருக்க தான் கமிட்டான ஒரு படத்தில் அந்த நடிகையை ஹீரோயினாக கமிட் செய்ய நடிகர் இயக்குநருக்கு கட்டளையிட; அதன்படி ஹீரோயினாக கமிட்டானார் நடிகை. படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் ஒரு பாடலில் நடிகைக்கும், சிறந்த நடிகருக்கும் நெருக்கமான காட்சிகளும் வைத்தார்கள். அப்படி வைக்க சொன்னதே நடிகர்தானாம். அந்தப் பாடலில் இரண்டு பேருக்குமான கெமிஸ்ட்ரி மீண்டும் பற்றிக்கொள்ள ஹோட்டல் அறைவரை சென்றதாம் அவர்களது பழக்கம்.

கையும் களவுமாக சிக்கிய நடிகை: ஒருபக்கம் சிறந்த நடிகர், இன்னொரு பக்கம் மாஸ் நடிகர் என ஒரே நேரத்தில் இரட்டை குதிரையில் சவாரி செய்துகொண்டிருந்த நடிகை சிறந்த நடிகரோடு ஹோட்டலில் ரூம் போட்டாராம். இன்னொருவருடன் நடிகை மீண்டும் நெருக்கமாக பழகிக்கொண்டிருந்தது மாஸ் நடிகருக்கு தெரியாமலே இருந்ததாம். சூழல் இப்படி இருக்க நடிகையும், சிறந்த நடிகரும் ரூம் போட்ட ஹோட்டலுக்கு மாஸ் நடிகர் எதார்த்தமாக செல்ல; அங்கு இருந்த அந்த நடிகரின் கையாள் நடிகை இன்னொருவருடன் வந்திருக்கும் விஷயத்தை போட்டுக்கொடுத்துவிட்டாராம்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாஸ் நடிகர்; நடிகைக்கு ஃபோன் செய்து விசாரிக்க; தான் வேறு ஒரு ஷூட்டில் பிஸியாக வெளியூரில் இருப்பதாக சொல்லியிருக்கிறார். இதனால் கொந்தளிப்பின் உச்சத்துக்கு சென்ற மாஸ் நடிகர்; நீ எங்க யாரோட இருக்கனு தெரியும்; அப்படியே போயிடு இனி வந்துடாத என்று சொல்லிவிட்டு சென்றவர்தானாம்; பல வருடங்கள் தன்னுடைய படத்தில் அந்த நடிகைக்கு வாய்ப்பே கொடுக்காமல் இருந்தாராம். இதையெல்லாம் பார்த்த திரையுலகினர் அட இந்த நடிகை கில்லாடி ப்பா; ஒரே நேரத்தில் இரட்டை குதிரைகளில் சவாரி செய்திருக்கிறாரே என்று கிசுகிசுக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X