நம்பர் நடிகை மீது கோபத்தில் இருக்கும் மூன்றெழுத்து நடிகை… இதுதான் காரணம் !

By Staff

சென்னை : நம்பர் நடிகை மீது, மூன்றெழுத்து நடிகை கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூன்றெழுத்து நடிகைக்கு பட வாய்ப்புகள் பெரிதாக இல்லாததால், மணியான இயக்குநரின் படத்தை பெரிதும் நம்பியே இருக்கிறார்.

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஓடிடியில் வெளியாகி தோல்வி அடைந்தது.

கொடிகட்டி பறந்தார்

கொடிகட்டி பறந்தார்

பாலிவுட், கோலிவுட் என கொடிகட்டிப்பறந்த மூன்றெழுத்து நடிகைக்கு தற்போது சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை. கடந்த ஆண்டு வெளியான படங்களும் தோல்வியைத் தழுவியதால் தற்போது ஓரிரு படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும், வரலாற்று சிறப்பு மிக்க படத்தில் நடித்துள்ள மூன்றெழுத்து நடிகை அந்த படத்திற்கு பின்பு மிகப்பெரிய வாய்ப்பு வரும் என்ற கனவில் உள்ளார்.

நம்பர் நடிகை மீது கோபம்

நம்பர் நடிகை மீது கோபம்

இந்த மூன்றெழுத்து நடிகை, நம்பர் நடிகை மீது கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் கோலிவுட் அவருக்கு அளித்திருக்கும் அந்த 'சூப்பர்' பட்டம் தானாம். நம்பர் நடிகைக்கு முன்பே தான் சினிமாவில் நுழைந்து விட்டதாகவும், நம்பர் நடிகையின் பல படங்கள் தோல்வியை சந்தித்துள்ளது. மேலும், சில காலம் காணாமல் போன அந்த நடிகைக்கு 'சூப்பர்' பட்டம் தேவையான என அந்த மூன்றெழுத்து நடிகை தாறுமாறாக கேள்வி எழுப்பி உள்ளாராம்.

படாதபாடுபடும் நடிகை

படாதபாடுபடும் நடிகை

மூன்றெழுத்து நடிகையும் நம்பர் நடிகையும் நண்பர்களாக இருந்தாலும் போட்டி என்று வந்து விட்டால் போட்டி தான் என்பது போல கடும் கோபத்துடன் பேசியுள்ளார் அந்த நடிகை. அதே போல ஏதாவது ஒரு மாஸான பட்டத்தை பெற வேண்டும் என்பதற்காக படாதபாடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

படுபிஸியாக

படுபிஸியாக

காதல் தோல்வியால் படவாய்ப்பை தழுவவிட்ட அந்த நம்பர் நடிகை தற்போது கம்பேக் கொடுத்து அதிரிபுதிரியான படங்களில் நடித்து வருகிறார். தனக்கென தனி பாணியை வகுத்துக்கொண்டு சோலோவாக படங்களில் மிரட்டி வருகிறார். தற்போது ஏராளமான திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு நிற்கக்கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறார் அந்த நம்பர் நடிகை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X