அந்த நபருடன் இருந்த நெருக்கம்… விவாகரத்துக்கு இதுதான் காரணம் !

சென்னை : சமீபத்தில் விவாகரத்து பெற்ற லாபா இயக்குநர், அந்த நபருடன் இருந்த நெருக்கம் காரணமாகவே மனைவியை விவாகரத்து செய்ததாக கிசுகிசுக்கப்படுகிறது.

தன்னுடைய முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்று, சினிமா வட்டாரத்தில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவருடைய படத்தை பார்ப்பதற்கே தனி தைரியம் தேவை என்று சொல்லும் அளவுக்கு காட்சிகள் படுபயங்கரமாக இருக்கும்.

பல முன்னணி நடிகர்களை வைத்து இந்த இயக்குநர் படம் இயக்கி இருந்தாலும் இவருடைய இயக்கத்தில் நடிக்க நடிகைகள் பயந்து சாவார்களாம் அந்த அளவுக்கு இவருக்கு கோபம் வந்து விட்டால் என்ன செய்கிறார் என்றே தெரியாதாம்.

Gossip: This is the reason for Director divorce

திருமணமான இந்த இயக்குநருக்கு சமீபத்தில் தான் விவாகரத்து கிடைத்தது. இவர்களின் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும், இயக்குநரின் செயலால் அவரது மனைவி அவரை விட்டு பல ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த பின்பே அண்மையில் விவாகரத்து கிடைத்துள்ளது. லாபா இயக்குநரின் படத்தைப்போலவே இவரும் எப்போதும் வித்தியாசமாகவே இருப்பாராம்.

லாபா இயக்குநர் பிச்சைக்காரருடன் நெருங்கி பழகியதாகவும், தொடர்ந்து அவருடனே பேசியும் வந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் அந்த பிச்சைக்காரருக்கு பட்டு வேட்டி, சட்டை எடுத்துக்கொடுத்து ராமேஸ்வரமும் அழைத்து சென்றுள்ளார். ஆடம்பரமான குடும்பத்தில் பிறந்த லாபாவின் மனைவி 'பூ'வால் இவரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும், லாபா இயக்குநர் மனைவி 'பூ'விடம் முகம் கொடுத்தோ, ஆசையாகவோ, மனம் விட்டோ எப்போதும் பேசியது இல்லையாம். இதனால், மனமுடைந்த 'பூ' இவரிடம் விவாகரத்து பெற்றதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X