பாலிவுட் கனவு தகர்ந்தது.. ராசி இல்லாத நடிகையாக ஆகிவிட்டேன்.. இயக்குநர் மீது கடுப்பான நடிகை!

By Staff

சென்னை : டாப் நடிகையின் பாலிவுட் கனவு தகர்ந்ததால் மூன்றெழுத்து இயக்குநர் மீது கடும்கோபத்தில் இருக்கிறார் அந்த நடிகை.

முதல் படத்திலேயே திறமையான இயக்குநர் என பெயர் எடுத்தவர் அந்த மூன்றெழுத்து இயக்குநர்.

பலரும் இந்த படம் பழைய படத்தின் காப்பி என்ற சொன்னாலும் அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இவர் இடம் பிடித்தார்.

அனைத்து படங்களும் ஹிட்

அனைத்து படங்களும் ஹிட்

முதல் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து முன்னணி நடிகரை வைத்து தொடர்ந்து 3 திரைப்படங்களை இயக்கினார். அந்த 3 திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று மூன்றெழுத்து இயக்குநரை மாஸ் இயக்குநராக மாற்றியது.

ஆரம்பமே சிக்கல்

ஆரம்பமே சிக்கல்

தெற்கு தேசத்தில் கிடைத்த புகழை வடக்கு பரப்ப நினைத்த அந்த மூன்றெழுத்து இயக்குநர், சூப்பர் ஹீரோ ஒருவருடன் இணைந்து ஒப்பந்தம் போட்டார். பேச்சுவார்த்தை தொடங்கும் போதே கொரோனா 2வது பீதியை கிளப்பியதால் படப்பிடிப்பு தாமதமானது. மேலும், அந்த சூப்பர் ஹீரோவின் மகன் ஒரு பிரச்சனையில் சிக்க படத்தை தொடங்கவே முடியவில்லை.

வருத்தத்தில் இயக்குநர்

வருத்தத்தில் இயக்குநர்

சூப்பர் ஹீரோவிடமிருந்த தகவல் வரும் வரும் என்று காத்திருந்து வெறுத்துப்போன அந்த மாஸ் இயக்குநர், நேரடியாக தொலைபேசியில் பேச, அந்த சூப்பர் ஹீரோவோ, பல படங்கள் கையில் இருப்பதாகவும் இந்த படங்களை முடித்தப்பிறகு பார்க்கலாம் என பிடி கொடுக்காமல் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மாஸ் ஹீரோ வருத்தத்தில் இருக்கிறாராம்.

ராசி இல்லாத நடிகை

ராசி இல்லாத நடிகை

தெற்கில் டாப் நடிகையாக இருந்தபோதும் வடக்கு பக்கம் போகாமல் இருந்த டாப் நடிகையை, மூன்றெழுத்து இயக்குநர் தான் பேசி சம்மதிக்க வைத்துள்ளார். தற்போது பாலிவுட்டின் கனவு தகர்ந்து விட்டதால், வடக்கில் ராசி இல்லாத நடிகை என்ற பெயர் வந்துவிட்டதே என டாப் நடிகை மூன்றெழுத்து இயக்குநர் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம். இயக்குநர் போன் செய்த போதும் அவர் எடுக்கவில்லை என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X