சென்னைக்கு வெளியே உறவினர் மூலம் பள்ளிக்கூடம் கட்டும் டாப் நடிகர்.. எல்லாம் அதற்கான மூவ்வாம்?
சென்னை: தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான அந்த நடிகர் சென்னைக்கு வெளியே உறவினர் மூலம் பள்ளிக்கூடம் கட்டி வருகிறாராம்.
கோலிவுட் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவிலும் டாப் நடிகராக இருப்பவர் அந்த டான்ஸ் நடிகர். ஆண்டுக்கு ஓரிரு படங்களை கொடுத்தாலும் கோடிக் கணக்கில் பிஸ்னஸ் கொடுத்து வருகிறார்.
தமிழ் அல்லாத மற்ற மொழிகளிலும் கோடி கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். அந்த நடிகரை எப்படியாவது இயக்கிவிட வேண்டும் என்பதே இன்றுள்ள பல இளம் இயக்குநர்களின் கனவாக உள்ளது.

ரசிகர்கள் மூலம்
நடிகர் தனது ரசிகர்கள் மூலம் பல ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இதேபோல் மாணவ மாணவிகளின் கல்வி செலவுக்கும் ரசிகர் மன்றத்தின் மூலம் உதவிகளை செய்து வருகிறார். கொரோனா பொது முடக்கத்தின் போதும் நடிகரின் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தனர்.

சென்னைக்கு வெளியே
இந்நிலையில் நடிகர் சென்னைக்கு வெளியே பள்ளிக்கூடம் ஒன்றை கட்டி வருவதாக தகவல் வெளியானது. ஏற்கனவே நடிகருக்கு சொந்தமாக ஒரு பள்ளிக்கூடம் உள்ள நிலையில் இரண்டாவது பள்ளிக்கூடமாக இந்த பள்ளிக்கூடம் கட்டப்படுவதாக கூறப்பட்டது.

பரவும் தகவல்
ஆனால் பள்ளிக்கூடத்தை கட்டுவது நடிகரின் உறவினர் என பின்னர் தகவல் வெளியானது. இந்நிலையில் அந்த பள்ளிக்கூடமும் நடிகருடையதுதான் என்றும் உறவினர் மூலம் அதனை செயல்படுத்துகிறார் என்றும் கூறப்படுகிறது.

அதற்கான மூவ்வா?
நடிகருக்கு ஏற்கனவே அரசியல் கனவு உள்ளது. இந்நிலையில் அதற்கான காயாகதான் பள்ளிக்கூடம் கட்டுகிறாரா நடிகர் என முனுமுனுக்கின்றனர் கோடம்பாக்கத்தினர். நடிகரின் ரசிகர்கள் பஞ்சாயத்து தேர்தலில் பங்கேற்று பட்டையை கிளப்பினர்.

ஓய்வெடுக்க போவதாக
இந்நிலையில் நடிகர் சினிமாவிலும் படு பிஸியாக உள்ளார். அடுத்தடுத்து படங்களில் பிஸியாக உள்ளார் நடிகர். பெரிய நிறுவனத்தின் படத்தில் நடித்துள்ள நடிகர் தனது டப்பிங் பணிகளை முடித்துவிட்டு சில மாதங்கள் ஓய்வெடுக்க போவதாகவும் கூறி வருகின்றனர் கோலிவுட்காரர்கள்


Click it and Unblock the Notifications











