மிஸ்ஸான தேசிய விருது.. உச்சகட்ட அப்செட்டில் தமாஸ் நடிகர்.. போட்டி நடிகர் முகத்துக்கு நேரா சம்பவம் மிஸ்ஸிங்
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தைப் பிடிக்க போட்டி போடுவது பாக்ஸ் ஆபீஸில் மட்டுமல்ல. அங்கீகாரங்களிலும் தான். குறிப்பாக தேசிய விருது என்றாலே, அது ஒரு நடிகரின் மார்க்கெட்டையும், மரியாதையையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். அதனால்தான் இந்த முறை அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள், திரையுலகில் பலரையும் மகிழ்ச்சியடைய வைத்ததோடு, ஒருவரை மட்டும் செம அப்செட்டிலும் ஆழ்த்தியிருக்கிறதாம்.
கடந்த சில ஆண்டுகளாக அந்த இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களுக்கு இடையே சமூக வலைதளங்களில் மறைமுக மோதல் ஓயவே இல்லை. ஒரு படத்தின் டீசர் வந்தாலும், இன்னொருவர் ரசிகர்கள் அதில் குறியீடுகளைத் தேடுகிறார்கள். ஒரு ஸ்டேஜ் ஸ்பீச் நடந்தாலும், யாரை தாக்கி பேசினார் என்ற விவாதம் கிளம்பிவிடுகிறது. திரையில் இல்லாத போட்டியை, ரசிகர்களே உருவாக்கி தினமும் டிரெண்டாக்கி வருகிறார்கள்.
இந்த சூழலில், சமீபத்தில் வெளியான தேசிய விருது பட்டியலில் ஒரு ஹீரோவுக்கு ஒரே நேரத்தில் இரண்டு பெரிய அங்கீகாரங்கள் கிடைத்திருப்பது கோலிவுட்டிலேயே பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதே நேரத்தில், கடந்த ஆண்டு நாடு முழுவதும் பாராட்டுகளைப் பெற்ற மற்றொரு ஹீரோவின் படம் சில தொழில்நுட்ப பிரிவுகளில் மட்டுமே கவுரவிக்கப்பட்டு, அவருக்கான தனிப்பட்ட அங்கீகாரம் கிடைக்காதது அவருடைய தரப்பை ஏமாற்றமடைய வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

நம்பிக்கை எல்லாம் வேஸ்ட்: இந்த நடிகர், இந்த முறை தேசிய விருது உறுதி என்ற நம்பிக்கையில்தான் இருந்தாராம். அதிலும், நீண்ட நாட்களாக தன்னுடன் ஒப்பிடப்படும் போட்டி நடிகருக்கு முன்னால், தானும் அதே மேடையில் தேசிய விருது பெற வேண்டும் என்ற ஆசை மிக அதிகமாக இருந்ததாம். ஆனால், இறுதியில் கணக்கு தலைகீழாக மாறிவிட்டதாம்.
ரொம்ப அப்செட்: விருது அறிவிப்புக்குப் பிறகு நெருங்கிய நண்பர்களிடமே தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதாகவும், "இந்த முறை கிடைக்கும் என்று ரொம்பவே எதிர்பார்த்தேன்" என்று மனம் திறந்து பேசியதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இதற்கிடையில், ரசிகர்கள் மட்டும் இந்த விவகாரத்தை விட தயாராக இல்லை. ஒருபுறம் "தகுதியானவருக்குத்தான் விருது கிடைத்திருக்கிறது" என்ற கொண்டாட்டமும், மறுபுறம் "அடுத்த முறை நிச்சயம் கிடைக்கும்" என்ற ஆறுதலும் சமூக வலைதளங்களில் மோதிக் கொண்டிருக்கிறது. இந்த விருது பட்டியல் முடிந்திருந்தாலும், அந்த இரண்டு முகாம்களுக்கிடையேயான போட்டி மட்டும் இன்னும் முடியவில்லை என்பதே கோலிவுட்டின் புதிய கிசுகிசு.


Click it and Unblock the Notifications