விரல் நடிகரை அவமானப்படுத்திய இயக்குநர்… இதுவரை கூட்டணி சேராததற்கு இதுதான் காரணம்!
சென்னை : விரல் நடிகரை இரண்டு எழுத்து இயக்குநர் ஒருவர் அவமானப்படுத்திய சம்பவம், கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆனாலும், இவர்கள் இருவரும் இதுவரை இணையாவே இல்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
குடும்ப பின்னணி கதைகளை இயக்குவதில் ஆர்வம் கொண்ட அந்த இரண்டு எழுத்து இயக்குநர், முன்னணி நடிகரை வைத்து ஒரு படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் 6ந் தேதி வெளியாக உள்ளது.

மனதில் இடம்பிடித்தார்
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் என்ற பெயருடன் திரைத்துறையில் அறிமுகமாகி இருந்தாலும். ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் விரல் நடிகர். தனது தந்தையை போலவே நடிகர், இயக்குநர், பாடகர் என பன்முகத்தன்மையுடன் வெகு விரைவிலேயே உச்சத்தை தொட்டு விட்டார்.

பெயர் கெட்டது
அளவுக்கு மீறி புகழ் கண்ணை மறைத்துவிடும் என்பார்கள், அது இந்த விரல் நடிகரின் வாழ்க்கையில் நுழைந்து இவரின் பெயரை கெடுத்துவிட்டது. ஏராளமான படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர் காதல் தோல்வியால் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருந்தார். இதனால், விரல் நடிகரின் பெயர் கெட்டது மட்டும் இல்லாமல், இவரின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டன.

கம்பேக் படம்
பல படங்களில் தோல்விக்கு பிறகு, புத்துயிர் பெற்ற மனிதனைப்போல மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்து வருகிறார் விரல் நடிகர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படம் விரல் நடிகரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக மாறியுள்ளது.

விரைவில் படம் வெளியாகும்
தற்போது விரல் நடிகர் ஏராளமாக திரைப்படங்களை கையில் வைத்துக் கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். இதில் முன்னணி இயக்குநரின் படம் முடியும் தருவாயில் உள்ளது. படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. அது மட்டுமில்லாமல் பிரபல தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

கடுப்பான இயக்குநர்
இந்நிலையில், விரல் நடிகரை இரண்டு எழுத்து இயக்குநர் ஒருவர் அவமானப்படுத்திய சம்பவம், தற்போது கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதாவது இரண்டு எழுத்து இயக்குநரின் படத்தில் நடித்து வந்த விரல் நடிகர் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வரமாட்டாராம். இதனால் கடுப்பான இயக்குநர் அவரிடம் பல முறை சரியான நேரத்திற்கு வரும்படி கூறியுள்ளார்.

அவமானப்படுத்திய இயக்குநர்
ஆனால் விரல் நடிகரோ எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் படப்பிடிப்புக்கு அவர் இஷ்டத்திற்கு வருவாராம். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த இயக்குநர், பணம் வாங்கிக்கொண்டு தானே நடிக்க வறீங்க, ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு வரவேண்டும் என தெரியாதா? என மொத்த படக்குழுவும் இருக்கும்போதே சகட்டு மேனிக்கு திட்டி அவமானப்படுத்தி உள்ளார். இந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆனபோதும், , இதுநாள் வரை விரல் நடிகர் அந்த இரண்டு எழுத்து இயக்குநருடன் கூட்டணி சேரவில்லையாம்.


Click it and Unblock the Notifications











