விரல் நடிகர் வெற்றி விழாவை புறக்கணித்தற்கான காரணம் இதானாம்... பரபரப்பில் கோலிவுட்!

By Staff

சென்னை: படத்தின் வெற்றி விழாவில் விரல் நடிகர் பங்கேற்காதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் அந்த வாரிசு நடிகர். சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் கோலிவுட்டில் அந்த நடிகருக்கு நல்ல செல்வாக்கு.

இதனால் இளைஞர் ஆனதுமே ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார். நடிகர் வளர வளர சர்ச்சைகளும் கூடவே வளர்ந்தன.

நடிகரை சுற்றிய சர்ச்சை

நடிகரை சுற்றிய சர்ச்சை

சக நடிகைகளுடன் டேட்டிங், காதல், காதல் தோல்வி, மீண்டும் காதல், மீண்டும் காதல் தோல்வி என தொடர்ந்து டைம் லைனில் இருந்து வந்தார் நடிகர். அதுமட்டுமின்றி படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வராமல், மொத்த படக்குழுவையும் காக்க வைத்து தான் நினைத்த நேரத்திற்கு வருகிறார் என்ற குற்றச்சாட்டும் விரல் நடிகரை சுற்றி வந்தது.

இருக்கும் இடம் தெரியாமல்

இருக்கும் இடம் தெரியாமல்

திடீரென எடை கூடி அங்கிள் லுக்கில் மாறினார் நடிகர். ஏற்கனவே நடிகரை கமிட் செய்தால் தயாரிப்பாளருக்குதான் நஷ்டம் என்று எண்ணிய பல இயக்குநர்கள் நடிகர் பக்கமே திரும்பாமல் இருந்தனர். இதனால் இடையில் சில ஆண்டுகள் நடிகர் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார்.

பழைய பன்னீர்செல்வமாக..

பழைய பன்னீர்செல்வமாக..

போட்டி நடிகர்கள் பீக்கில் செல்ல, மீண்டும் பேக் டூ ஃபார்ம்மானார் விரல் நடிகர். அதிரடியாக எடையை குறைத்து பழைய பன்னீர்செல்வமாக மாறிய நடிகருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன. மேலும் படப்பிடிப்புக்கு சொன்ன நேரத்தில் வருவது என ஆள் மட்டுமின்றி நடவடிக்கையும் மாறிவிட்டதாக சிலாகித்தனர் கோலிவுட்காரர்கள்.

பிளாக் பஸ்டர் ஹிட்

பிளாக் பஸ்டர் ஹிட்

இந்நிலையில் விரல் நடிகர் நடிப்பில் உருவான படம் ஒன்று பல்வேறு தடைகளுக்கு பின்னர் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. எதிர்பார்த்தப்படியே படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. வசூலையும் வாரி குவித்தது. நடிகரின் கேரியரில் பெரிய பிரேக்கை கொடுத்தப்படம் இதுதான் என்று சொல்லும் அளவுக்கு இருந்தது இந்தப் படம்.

புறக்கணித்த நடிகர்

புறக்கணித்த நடிகர்

இதனை தொடர்ந்து படத்தின் வெற்றி விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. இதில் படத்தின் ஹீரோவான விரல் நடிகர் பங்கேற்கவில்லை. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் ஏன் வெற்றி விழாவில் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளர் மறுப்பு

தயாரிப்பாளர் மறுப்பு

அதாவது வெற்றி விழாவில் படத்தின் வசூல் தொகையை போஸ்டராக வெளியிட விரும்பியுள்ளார் நடிகர். ஆனால் அதற்கு தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ளவில்லையாம். இதனால் நடிகருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் விரல் நடிகர் வெற்றி விழாவை புறக்கணித்தாராம்.

Recommended Video

Simbhu Fans-ஐ மேடையில் புகழ்ந்த Director Vnekat Prabhu | Maanadu Success Meet
கோர்ட் வரை சென்ற பிரச்சனை

கோர்ட் வரை சென்ற பிரச்சனை

அதோடு நடிகரின் அப்பாவுக்கும் தயாரிப்பு தரப்புக்கும் இடையேயும் ஏற்கனவே பிரச்சனை இருந்தது. பிரச்சனை கோர்ட் வரை சென்றதால் நடிகர் மீதும் நடிகரின் குடும்பத்தினர் மீதும் படக்குழு அதிருப்தியில் இருந்தது. இதையெல்லாம் சேர்த்து வைத்துதான் நடிகர் சக்ஸஸ் மீட்டை புறக்கணித்தார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X