தான்தான் டாப் என கூறி வந்த அக்கட தேசத்து நடிகை.. வளைத்து வளைத்து போட்டோ ஷூட் நடத்த அதான் காரணமாம்!
சென்னை: தான்தான் டாப் என கூறி வந்த அக்கட தேசத்து நடிகை வளைத்து வளைத்து போட்டோ ஷுட் நடத்துவதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
அக்கட தேசத்து நடிகை அந்த மொழியில் அறிமுகமானாலும், பெயர் சொல்லும்படியாக இதுவரை ஒரு படமும் நடிக்கவில்லை. சினிமாவுக்குள் நுழைந்து 10 ஆண்டுகளை நெருங்கினாலும் சொந்த மொழியில் சொற்ப படங்களிலேயே நடித்துள்ளார்.
வட நாட்டில் வாய்ப்பு கிடைக்க அங்கு சென்று திறமையை காட்டினார். ஆனால் அம்மணியின் நடிப்பால் திருப்தியாகாத இந்தி வாலாக்கள் அதன்பிறகு பெரிதாக ரெஸ்பான்ஸ் காட்டவில்லை.

உச்ச நடிகர்களுடன்
கோலிவுட்டில் ஜாக்பாட் அடித்தது போல் அடுத்தடுத்து டாப் நடிகர்களின் படங்களில் கமிட்டானார். இருப்பினும் நடிகையின் திறமை எந்தப் படத்திலும் வெளிப்பட வில்லை. உச்ச நடிகர்களுடன் நடித்த போதும் ஜஸ்ட் வந்துதான் போயுள்ளார். நடிப்பதற்கான காட்சிகளோ அல்லது ஆக்ஷன் காட்சிகளோ இல்லை.

தான்தான் டாப் நடிகை
உச்ச நடிகர்களின் படங்களில் நடித்ததால் சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களை பெற்றார். இதனால் தான் தான் டாப் நடிகை என கூறி வந்தார் அம்மணி. தொடர்ந்து சக நடிகர்களின் படங்களை பாராட்டுவது, பிறந்தநாள் வாழ்த்து கூறுவது என சமுக வலைதளங்களில் நட்பு வட்டத்தையும் உருவாக்கினார் நடிகை.

சான்ஸ் கேட்ட நடிகை
சில நடிகர்களிடம் உங்களுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் என ஓபனாகவே சான்ஸ் கேட்டார் நடிகை. இதனால் சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சனத்துக்கும் ஆளானார் நடிகை. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாத நடிகை வாய்ப்பு கிடைத்தால் போதும் என இருந்தார்.

போட்டோ ஷூட்டுக்கு காரணம்
அதற்கு பலனாக வாய்ப்பு கேட்ட நடிகரின் படத்திலேயே கமிட்டான நடிகை படப்பிடிப்பிடில் பங்கேற்று வருகிறார். ஆனால் அதன்பிறகு கோலிவுட்டில் வாய்ப்பே கிடைக்கவில்லை நடிகைக்கு. எந்த படத்திலும் கமிட் ஆகாத நடிகை எப்படியாவது வாய்ப்பை பெற்றுவிட வேண்டும் என்பதற்காகவே போட்டோ ஷூட்டில் இறங்கியுள்ளாராம்.

கோடம்பாக்கத்தில் கோலொச்சி விடலாம்
தாராளம் காட்டவும் தயாராகியுள்ள நடிகை கிளாமர் தூக்கலாக போட்டோ ஷூட் நடத்தி வருவதற்கும் காரணம் அதுதான் என்கின்றனர் கோடம்பாக்கத்தினர். நடிகையின் போட்டோ ஷூட்டுக்களை பார்த்த நட்பு வட்டாரம் இப்படியே போனால் நிச்சயம் விரைவில் கோடம்பாக்கத்தில் கோலொச்சி விடலாம் என கூறி வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











