»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

கடந்த ஆண்டிவ் திரைப் படங்களை விட சில ஹீரோக்கள், ஹீரோயின்கள் பற்றிய வதந்திகள்தான் கோலிவுட்டில் சூப்பர் ஹிட்களாக வலம் வந்தன.

கமல் - சிம்ரன், சூர்யா - ஜோதிகா, ஸ்ரீகாந்த் - சினேகா, சிலம்பரசன் - ஐஸ்வர்யா, பாலா- லைலா என்று இந்தப் பட்டியல் நீண்டது.

இதில் கமல்- சிம்ரன், ஜோதிகா-சூர்யா ஜோடிதான் அதிகம் "அரவையில்" சிக்கிய ஜோடி. அதேபோல, ஆண்டு முடிவில் ஸ்ரீகாந்த்-சினேகா ஜோடிகுறித்து அதிக அளவில் கிசுகிசுக்கள் பரவின.

"கடலை போடுவதில்" விக்ரம் மன்னனாகி வருவதாகவும், பல நடிகைகளிடம் அவர் வலிய வலியப் போய் பேசி "கரெக்ட்" செய்வதாகவும்,ஜோதிகாவிடம் அப்படி முயற்சித்தபோது, அவர் திட்டி விட்டதாகவும் வந்த செய்தி தான் சமீபத்தில் வெளியான ஹாட் விவகாரம்.

இந்தி நடிகை ரவீனா தண்டனின் உறவுப் பெண் நான் என்று புருடா விட்டார் ஜெமினி புகழ் கிரண். ஆனால், அது பொய் என்று கோலிவுட் உறுதி செய்தது.

தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளாவிட்டால், பெயரைக் கெடுத்து விடுவதாக நடிகர் பிரபு தேவாவை, காயத்ரி ஜெயராம் மிரட்டியதாகவும் செய்திவந்தது 2002ல் தான்.

Please Wait while comments are loading...