டைவர்ஸுக்கு தயார்?.. நடிகை விரித்த போதை வலையில் முழுவதுமாக சிக்கிய நடிகர்?.. மனைவி நிலைமை?
சென்னை: இந்திய அளவில் தவிர்க்க முடியாத நடிகர் அவர். சினிமாவில் அறிமுகமான போது மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்த அவர்; இன்று கேட்காத புகழ்ச்சிகள் இல்லை. அவரை விமர்சித்தவர்கள் எல்லாம் இப்போது அவர் முன் நிற்பதற்கே தயங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த அளவுக்கு இருக்கிறது அவரது வளர்ச்சி. அவருக்கென்று மிகப்பெரிய படையே ரசிகராக இருக்கிறது. இந்தச் சூழலில் கடந்த சில காலமாகவே நடிகரை சுற்றி ஒரு சர்ச்சை வட்டமடித்துக்கொண்டே இருக்கிறது.
தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது இந்த நடிகரை கிண்டல் செய்யாத வாய்களே இல்லை. இதெல்லாம் என்ன மாதிரியான முகம் ஒழுங்காவே இல்லை என்றெல்லாம் இஷ்டத்துக்கு பேசினார்கள். ஆனால் பொறுமை கடலினும் பெரிது என்பதை உணர்ந்துகொண்டு தனது பாதையில் மட்டும்தான் பார்வையையும், கவனத்தையும் செலுத்தினார். சொல்லப்போனால் ஒரு தவ நிலைக்கே நடிகர் சென்றிருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். படிப்படியாக ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு முன்னேற ஆரம்பித்தார்.

தனி சாம்ராஜ்ஜியம்: கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியவர் முதலில் பிடித்தது குடும்ப ஆடியன்ஸை. அட அந்த நடிகர் படமா நம்பி தாராளமாக போகலாம் ப்பா என்று தான் அறிமுகமான சில படங்களிலேயே ரசிகர்களிடையே நம்பிக்கையை விதைக்க ஆரம்பித்துவிட்டார். ஒருகட்டத்தில் நடிகரின் வளர்ச்சி புயல் வேகத்தில் இருந்தது. தொட்டதெல்லாம் ஹிட்டாக மாறின. இதனால் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கம் செய்ய ஆரம்பித்தார்.
சர்ச்சைகள்: பொதுவாக எவர் ஒருவர் அதீதமாக வளர்ந்துவருகிறாரோ அவரை சுற்றி சர்ச்சைகள் எழுவதும் இயல்பான ஒன்றுதான். ஆனால் இந்த நடிகரை சுற்றி பெண் சர்ச்சை எழ ஆரம்பித்தது. முக்கியமாக ஒரு நடிகையுடன் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்த அவர்; நடிகையின் கட்டுப்பாட்டுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக செல்ல ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் இருவருக்குமான பழக்கம் வெளியில் கசிய ஆரம்பித்ததும்; வீட்டுக்கு பயந்து நடிகையை ஒதுக்க ஆரம்பித்தார் நடிகர்.
மீண்டும் பழக்கம்: படங்களில்தான் ஒதுக்கினாரே ஒழிய நிஜ வாழ்க்கையிலிருந்து ஒதுக்காமல்தான் இருந்தாராம் நடிகர். மாதத்துக்கு ஒருமுறையாவது சந்தித்து பல விஷயங்களை பேசுவதை இருவரும் வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார்கள். இருந்தாலும் நடிகரை தனது அருகிலேயே வைத்துக்கொள்வதற்கான அத்தனை வேலைகளையும் நடிகை பார்த்தாராம். இது ஒருகட்டத்தில் நடிகரின் மனைவிக்கு தெரியவந்துவிட; பல வருடங்கள் கழித்து கிளம்பிய பூதமாக பிரச்னை வெடித்துவிட்டது வீட்டில்.
விரைவில் டைவர்ஸ்: பிரச்னை ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க நடிகையுடன் மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிட்டார் நடிகர். இதனால் கடுப்பான மனைவி நடிகரிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஊரை காலி செய்துவிட்டாராம். நடிகரும் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் மனைவியார் கேட்கவில்லையாம்.இதற்கிடையே நடிகரின் அருகே மனைவி இல்லாத குறையை நடிகை தீர்த்து வைக்க ஆரம்பித்தாராம். இதனால் மனைவியை முழுவதுமாகவே மறக்க ஆரம்பித்துவிட்டாராம் நடிகர்.
முன்பெல்லாம் ஃபோன் செய்து மீண்டும் வந்துவிடு என்று சொல்லிய நடிகரோ; இப்போது நடிகை போதையிலும், இன்னொரு போதையிலும் தத்தளித்துக்கொண்டிருப்பதால் ஃபோன்கூட செய்வதில்லையாம். சில நாட்களுக்கு முன்புகூட தனிமையில் இருந்தபோது; எப்போதும் நாம் இருவரும் ஒன்றாகவே இருக்க வேண்டும். அதற்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது என்று நடிகை சொல்ல; மனைவியை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்துவிட்டாராம் நடிகர். விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வரலாம் என்று கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.


Click it and Unblock the Notifications











