மகனின் பேச்சு.. கொந்தளிப்பில் தந்தை.. நடிகை மீது திரும்பிய அஸ்திரம்.. வீட்ல புது பஞ்சாயத்தாம்

By Staff

சென்னை: நடிகரின் தந்தை ஒழுக்கமானவர் என்று சினிமாவில் பெயர் எடுத்தவர். இந்த நடிகரும் அதே பெயரைத்தான் எடுத்து வைத்திருக்கிறார். அவரது நடிப்பில் விரைவில் ஒரு படம் வெளியாகவிருக்கிறது. அந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் பயங்கரமாக சூடு பிடித்திருக்கின்றன. அந்தவகையில் ஒரு ப்ரோமோஷனில் நடிகர் பேசிய வார்த்தை தந்தையை கொந்தளிப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்றிருக்கிறதாம். மேலும் நடிகைதான் இதற்கெல்லாம் காரணம் என்றும் நினைக்கிறாராம் மூத்தவர்.

தமிழ்நாட்டின் ஒரு கிராமத்திலிருந்து வந்தவர் அந்த நடிகர். ரொம்பவே கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த அவர் சிரமப்பட்டு சினிமாவுக்குள் நுழைந்து ஏகப்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர். அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தவை. முக்கியமாக சிறந்த நடிகர் என்றும் பெயர் எடுத்தவர் நல்ல மனிதர், ஒழுக்கமானவர் என்ற பெயரையும் எடுத்தவர். ஒருவழியாக நன்றாக சம்பாதித்து குடும்பத்தையும் வசதியான இடத்துக்கு கொண்டுவந்து நிறுத்தினார்.

gossip kollywood

மகனின் என்ட்ரி: தான் நடிகராக இருந்தாலும் தனது வாரிசை நடிகராக அறிமுகப்படுத்த மூத்தவருக்கு துளியும் இஷ்டமில்லை. இருந்தாலும் காலம் வேறொரு காட்சியை வைத்திருக்கும் என்பதற்கேற்ப பெரிய பேனரில்; பெரிய இயக்குநரின் இயக்கத்தில் சினிமாவில் அறிமுகமானார் மகன். அந்தப் படம் நன்றாக போனாலும் நடிகருக்கோ நடிக்கவே வரவில்லை என்று பேச்சு எழுந்தது. இருந்தாலும் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத அவர் தனது திறமையை படிப்படியாக வளர்த்தார்.

முன்னணி நடிகர்: திறமை இருந்தால் முன்னேறலாம் என்பதற்கே நடிகர் வளர்த்த திறமை அவரை முன்னணி நடிகர் என்ற இடத்துக்கு கொண்டு சேர்த்தது. மேலும் டாப் ஹீரோக்கள் நான்கு பேருக்கு அடுத்தபடியாக நடிகர் வந்தார். இதனால் அவருக்கென்று ரசிகர்களும் பெருகினர். அதுமட்டுமின்றி தன்னுடன் நடித்த நடிகையை காதலித்தார். முதலில் அந்தக் காதலுக்கு நடிகரின் தந்தை கடுமையான எதிர்வினையை ஆற்றினார். ஆனால் நடிகர் பிடிவாதமாக இருந்ததால் திருமணத்துக்கு க்ரீன் சிக்னல் காண்பித்தார் நடிகரின் தந்தை.

குடும்பத்தில் பஞ்சாயத்து: திருமணத்துக்கு பிறகு ஒற்றுமையாக கூட்டு குடும்பமாக இருந்தவர்களுக்குள் சமீபகாலமாக பஞ்சாயத்து என்று பேச்சு அடிபடுகிறது. மேலும் நடிகரும், நடிகையும் வெளிமாநிலத்தில் செட்டில் ஆகிவிட்டார்கள். அதற்கு காரணம் நடிகைதான் என்று பலரும் பேசினாலும் சம்பந்தப்பட்டவர்கள் அமைதியாகவே இருக்கிறார்கள். அதேசமயம் அதெல்லாம் இல்லவே இல்லை என்று நடிகை மறுத்திருக்கிறார். இருந்தாலும் நடிகைதான் முழு காரணம் என்று கோலிவுட் முழுக்க கிசுகிசு எழுந்திருக்கிறது.

மீண்டும் பிரச்னை: இருந்தாலும் இப்போது பிரச்னை ஓய்ந்துவிட்டது என்று கூறப்பட்டது. நிலைமை இப்படி இருக்க சமீபத்தில் தனது படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்ட நடிகர்; சில வார்த்தைகளை பேசிவைக்க; அது நடிகரின் தந்தையுடைய இமேஜை கொஞ்சம் பதம் பார்த்துவிட்டது. இதனால் கொந்தளிப்பின் உச்சத்தில் இருக்கிறாராம் மூத்தவர். அதுமட்டுமின்றி இத்தனை வருடங்கள் தன்னை பற்றி இப்படி பேசாத மகன் இப்போது இப்படி பேசியதற்கு நடிகைதான் முக்கிய காரணம் என்று நினைக்கிறாராம். மேலும் தனது மேல் உள்ள கோபத்தை தன் மகனை வைத்து நடிகை தீர்த்துக்கொள்கிறார் என்றும் குடும்பத்தினரிடம் புலம்புகிறாராம் மூத்தவர். முக்கியமாக மகனை அழைத்த நடிகர் தன் முன்னாடியே நடிகையை கண்டிக்க செய்ததாகவும்; அதற்கு நடிகர் மறுத்ததால் வீட்டுக்குள் மீண்டும் பிரச்னை முளைத்திருப்பதாக சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X