லிவிங் டூ கெதர் வாழ்க்கை.. நடிகையின் மகளுக்கு அந்த மாதிரி டார்ச்சர் கொடுத்த நடிகர்?
சென்னை: சினிமாவில் பல முயற்சிகளை மேற்கொண்டவர் அந்த நடிகர். அவர் மீது பலருக்கும் பலத்த மரியாதை இருக்கிறது. அதேசமயம் பெண்கள் விஷயத்தில் படு வீக் என்ற முத்திரையும் அவருக்கு இருக்கிறது. தனது பெர்சனல் வாழ்க்கையை மூடி மறைக்க விரும்பாத அந்த நடிகர் கடந்த சில வருடங்களாகவே சிங்கிளாக இருக்கிறார். காரணம் தன்னுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்த நடிகை பிரிந்துவிட்டார். ஏனெனில் அந்த நடிகையின் மகளிடமும் நடிகர் தனது சித்து வேலைகளை காட்ட தொடங்கினாராம்.
கோலிவுட்டில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் அவர். ஏகப்பட்ட பட்டங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் தென்னகத்தை சேர்ந்த அந்த நடிகர் நடிக்கும் படங்களை பார்ப்பதற்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள்வரை ஆர்வம் காட்டுவார்கள். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு புதுமையை செய்து பல சோதனை முயற்சிகளை தொடர்ந்து செய்துகொண்டே வருபவர். இதன் காரணமாக அவர் மீது பலருக்கும் பெரிய மரியாதை இருக்கிறது என்பதுதான் கோடம்பாக்கத்து உண்மை.

சர்ச்சைகள்: நடிகர் எவ்வளவுக்கு எவ்வளவு புகழின் உச்சியில் இருக்கிறாரோ அதே அளவுக்கு சர்ச்சைகளின் உச்சிக்கும் சென்றவர். அவர் செய்த சில திருமணங்கள் தோல்வியில் முடிந்தன. இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் நடிகர் கவலைப்படவில்லை. தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவந்த அவர்; தனது திறமையை வைத்தும் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருந்தார். இதன் காரணமாக அவர் மீது பலருக்கும் க்ரஷ் இருந்தது.
லிவிங் டூ கெதர்: ஒருகட்டத்தில் இளம் நடிகைகளுடனும் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்ட அந்த நடிகர்; தான் வளர்ந்துவந்த காலத்தில் தன்னுடன் நடித்த நடிகையுடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் வாழ ஆரம்பித்தார். மேலும் அவருடன் பல வருடங்கள் கழித்து ஜோடி போட்டும் ஒரு படத்தில் நடித்தார். அதுமட்டுமின்றி தன்னுடைய படங்களில் ஏதேனும் ஒரு வகையில் அந்த நடிகையை உள்ளே நுழைத்து அவரும் இருக்கும்படி பார்த்துக்கொண்டார் நடிகர்.
பிரச்னை: ஆனால் கடந்த சில காலமாகவே அந்த நடிகையுடன் தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டது. ஆரம்பத்தில் வீட்டுக்கு ஒழுங்காக வராத நடிகர் ஒருகட்டத்தில் வீட்டிலேயே குடியாய் கிடந்தாராம். நடிகையும் சரி நடிகர் நம்முடனேயே இருக்கிறாரே என்று உச்சக்கட்ட காதலில் உருகி மருகியே போனாராம். ஆனால் நடிகரோ மனதுக்குள் வேறு கணக்கை போட்டிருந்தது நடிகைக்கு பின்னர்தான் தெரியவந்ததாம்.
என்ன நடந்தது?: அதாவது நடிகருடன் வாழ்ந்த நடிகை ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். அந்த விவாகரத்துக்கு காரணமே இந்த நடிகருடன் இருந்த பழக்கம்தான் என்று சொல்லப்படுவதுண்டு. நிலைமை இப்படி இருக்க லிவிங் டூ கெதரில் நடிகருடன் வாழ்ந்தபோது தனது முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மகளையும் தன்னுடன் தங்க வைத்திருந்தாராம் நடிகை. ஒருகட்டத்தில் நடிகரின் பார்வை நடிகையின் மகள் பக்கம் திரும்பியதாம். அவ்வப்போது அந்த மாதிரியான டார்ச்சரை நடிகையின் மகளுக்கு கொடுக்க ஆரம்பித்தாராம் நடிகர். பொறுத்து பொறுத்து பார்த்த அந்த இளம்பெண் தன்னுடைய தாயிடம் விஷயத்தை சொல்லியதை தொடர்ந்து இனியும் விட்டால் மகளின் வாழ்க்கை பாழாகிவிடும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டுதான் நடிகரைவிட்டு விலகிவிட்டாராம். இந்த கிசுகிசுதான் கோடம்பாகத்தில் இப்போது ஹாட் டாபிக்காக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











