ஒரே வீட்டில் குடுத்தனம்.. கர்ப்பமான நடிகை?.,. கலைக்க சொன்ன நடிகர்?.. பிரிவுக்கு காரணம் இதுவா?

By Staff

சென்னை: அந்த நடிகை தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் படு ஃபேமஸாக வலம் வந்துகொண்டிருந்தார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய அழகையும், திறமையையும் வளர்த்துக்கொண்டே சென்றவருக்கு ஒருகட்டத்தில் இந்திய அளவில் அடையாளம் கிடைத்தது. அப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு நடிகருடன் அவர் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் இப்போது பிரிந்துவிட்டதாக கூறப்பட்ட சூழலில் புதிய கிசுகிசு ஒன்று கிளம்பியிருக்கிறது.

பக்கத்து மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட அந்த நடிகை வாரிசு நடிகரின் கண்ணில் பட்டதால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். முதல் படத்திலேயே பெரிய நடிகருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் காரணமாக திரையுலகின் பார்வை அவர் மீது பெரிய அளவில் குவிந்தது. அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க; அதிர்ஷ்டமும், திறமையும், வாரிசு நடிகரின் கரிசனையும் இருந்ததன் காரணமாக அடுத்தடுத்து நடிகைக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.

Kollywood Gossip Tamil Cinema

முன்னணி நடிகை: தனக்கு கிடைத்த வாய்ப்புகளை நடிகை சரியாக பயன்படுத்திக்கொண்டார். இதன் காரணமாக ரசிகர்கள் அவரை படிப்படியாக உயரத்துக்கு கொண்டு சென்றனர். பிறகு தமிழிலும் மூன்று எழுத்து படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் ஒரு பாடலில் படு கவர்ச்சி நடனம் ஆடினார். அதனைப் பார்த்து கோலிவுட் ரசிகர்களும், திரையுலகினரும் கிறங்கிப்போனார்கள். தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து இங்கும் தனது கொடியை உயர பறக்கவிட்டார்.

இந்தியா முழுவதும் அடையாளம்: ஒருகட்டத்தில் மற்ற திரையுலகை மறக்கும் அளவுக்கு தமிழ் திரையுலகம் அவரை பிஸியாகவே வைத்தது. நடிகையும் அதனை ரொம்பவே என்ஜாய் செய்துகொண்டிருந்தார். நிலைமை இப்படி இருக்க பல்வேறு மொழிகளில் உருவான பிரமாண்ட படத்தில் கமிட்டானார் அம்மணி. பெரும் இயக்குநர் இயக்கிய அந்தப் படத்தில் நடித்ததை அடுத்து இந்தியா முழுவதும் அம்மணியின் பெயர் அடையாளப்பட்டது. இதனால் அவர் உற்சாகத்தின் உச்சத்துக்கு சென்றார்.

நடிகருடன் நெருக்கம்: அதுமட்டுமின்றி அந்தப் படத்தின் ஹீரோவோடு ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும்; இந்தப் படம் அவர்களுக்கு இடையேயான நெருக்கத்தை அதிகப்படுத்திவிட்டதாம். ஒன்றாக வெளிநாடுக்கு பறப்பது, சினிமா விழாக்களில் ஒன்றாக கலந்துகொள்வது என்று ஏகபோகமாக வாழ்ந்துவந்தார்களாம். அந்த நெருக்கம் ஒருகட்டத்தில் காதலாக மாறியதாம்.

கர்ப்பமான நடிகை: நடிகரின் காதலில் தன்னை முழுதாக ஒப்படைத்துவிட்டாராம் நடிகை. அப்படி ஒருமுறை ஒப்படைத்த போது நடிகை கர்ப்பமும் ஆகிவிட்டாராம். இதனை நடிகர் எதிர்பார்க்கவில்லையாம். உடனடியாக கர்ப்பத்தை கலைக்கும்படி நடிகர் சொல்ல; நடிகை மறுத்துவிட்டாராம். எப்படியும் திருமணம் செய்துகொள்ளத்தானே போகிறோம் பிறகு ஏன் கலைக்க வேண்டும் என்று நடிகை கேட்டாராம். அதற்கு நடிகரோ அதெல்லாம் சரிதான் இன்னும் கொஞ்சம் காலம் கழித்துதான் திருமணம் செய்யப்போகிறோம்; அப்போது நீ கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கமாகிடும் என்று சொன்னாராம். நடிகைக்கு அதுவும் சரி என்று பட்டதால் கர்ப்பத்தை கலைத்தாராம். ஆனால் இந்த விஷயம் நடிகரின் வீட்டுக்கு தெரிந்து பெரிய பிரச்னை ஆனதால்; நடிகையை கழற்றிவிட்டுவிட்டாராம் நடிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X