வெற்றி நடிகரின் மனைவியை மயக்கிய அந்த நடிகர்?.. பார்ட்டி முதல் வெளிநாட்டு டூர்?.. ஆக்டர் ஆட்டம் ஓவரோ?

By Staff

சென்னை: கோலிவுட்டின் தவிர்க்கவே முடியாத நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் அவர். கைகளில் டஜன் கணக்காக படம் வைத்திருக்கும் அவர் பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதேசமயம் அவரை சுற்றி சர்ச்சைகளும் வட்டமடித்துக்கொண்டே இருக்கின்றன. இப்போது ஒரு சர்ச்சை அவரை சுற்றி வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதாவது சக நடிகரின் மனைவியை மயக்கி தனது வலையில் அந்த நடிகர் விழ வைத்துவிட்டார் என்றும்; அந்தப் பிரச்னை பூதாகரமாகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கோலிவுட்டில் அந்த நடிகர் அறிமுகமானபோது அவரது குடும்பம் செட்டிலான குடும்பம் எல்லாம் இல்லை. மிடில் கிளாஸ் என்ற ரேஞ்சில்தான் இருந்தது. இவரும் ஏகப்பட்ட உருவ கேலிகளை சந்தித்தார். ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத அவர் தனது திறமையை மட்டும் நம்பி படிப்படியாக முன்னேறினார். யாரெல்லாம் உருவ கேலி செய்தார்களோ அவர்களே நடிகரை பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு அழகிலும், திறமையிலும் உயர்ந்து நின்றார். இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் மலை போல் குவிய ஆரம்பித்தன.

Gossip Tamil Cinema Kollywood

சிறந்த நடிகர்: அதேபோல் தனது திறமையை வளர்த்துக்கொண்ட அவர் ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பில் வேரியேஷன்களை காண்பித்து ரசிகர்களையும், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களையும் கவர்ந்தார். மேலும் இந்திய அளவில் ஜொலிக்கும் நடிகராகவும் மாறினார். மிடில் கிளாஸிலிருந்து வந்த ஒரு பையன் தனது குடும்பத்தை லக்ஸரி க்ளாஸுக்கு உயர்த்தி, பெரிய சொகுசு பங்களா ஒன்றையும் கட்டினார். இப்போது அவர் கைவசம் டஜன் கணக்கில் படங்கள் இருக்கின்றன.

சர்ச்சை: சிறந்த நடிகர் என்று அவர் பெயர் எடுத்தாலும்; பெண்கள் விஷயத்தில் ரொம்பவே வீக் என்று அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்றன. சினிமாவில் சில நட்சத்திர ஜோடிகள் விவாகரத்து ஆனதற்கு இந்த நடிகர்தான் காரணம் என்று பலரும் பேச ஆரம்பித்தார்கள். மேலும் இவரது திருமண வாழ்க்கையும் கேள்விக்குறியில் நிற்பதற்கும் நடிகரின் நடத்தைதான் காரணம் என்று சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ஆனால் நடிகரோ அமைதியாக தனது வேலையை பார்த்துவருகிறார்.

புது பஞ்சாயத்து: இந்நிலையில் நடிகரை சுற்றி புதிய பஞ்சாயத்து ஒன்று கிளம்பியிருக்கிறது. அதாவது வெற்றி நடிகர் தனது மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்துவந்தார். அவர்களுக்கு குழந்தைகளும் இருக்கிறார்கள். வெற்றி நடிகரின் மனைவி கொஞ்சம் மாடர்ன் கலாசாரத்தை பின்பற்றக்கூடியவர். அதாவது பார்ட்டி, ஃபன் என சுற்றக்கூடியவர். அப்படி ஒரு பார்ட்டியில் ஐந்து எழுத்து நடிகரின் அறிமுகம் கிடைத்ததாம். நடிகரும் ஜாலியாக பேச; இருவருக்குமான பழக்கம் பார்ட்டிகளில் தொடர்ந்துகொண்டிருந்ததாம்.

தனியாக சென்ற மனைவி: மனைவி செல்லும் பார்ட்டிகளுக்கு பெரும்பாலும் வெற்றி நடிகரும் செல்வது வழக்கம்தான். ஆனால் சமீபகாலமாக வெற்றி நடிகரின் மனைவி யாருக்கும் தெரியாமல் ஐந்து எழுத்து நடிகரோடு பார்ட்டிக்கு செல்ல ஆரம்பித்துவிட்டாராம். அதுமட்டுமின்றி இவர்கள் இருவரும் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டுமென்பதற்காக வெற்றி நடிகரிடம் அடம் பிடித்து ஃபாரின் டூர் அடித்தாராம் மனைவி. அங்கும் கணவரோடு நேரம் கழிக்காமல் ஐந்து எழுத்து நடிகரோடு அதிகம் நேரம் செலவழித்தாராம். இதையெல்லாம் முதலில் அந்த நடிகர் சாதாரணமாக எடுத்துக்கொண்டாராம்.

முற்றிப்போன பிரச்னை: இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களாகவே ஐந்து எழுத்து நடிகர் வெற்றி நடிகரின் மனைவிக்கு அடிக்கடி ஃபோன் செய்கிறாராம். முக்கியமாக அந்த ஃபோன் கால்கள் அனைத்துமே இரவு நேரத்தில் வந்தனவாம். மேலும் அடிக்கடி இரண்டு பேரும் பார்ட்டி வேறு செய்ததாகவும்; இதனை விரும்பாத வெற்றி நடிகர் மனைவியை கண்டித்ததாகவும்; அதனால் இப்போது இவர்கள் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டிருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த கிசுகிசுதான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X