வீட்டில் மனைவி.. வெளியே முன்னாள் காதலி.. பெரிய குடும்பத்து பையன் பாக்குற வேலையா சார் இது.. போச்சே

By Staff

சென்னை; பெரிய குடும்பத்தை சேர்ந்த நபர் ஒருவர் சினிமா உலகில் பெரிய ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அவர்தான் தற்போது பெரிய சிக்கலில் மாட்டி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் அந்த ஹீரோ தற்போது தமிழில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் கூட அவர் ஹிட் படம் ஒன்றை கொடுத்தார். ஆனால் அவர் அடிக்கடி ஹிட் படங்களை எல்லாம் கொடுப்பது இல்லை.

 Gossips: A famous actor is in relationship with tamil actress even after marriage

அவரும் வேறு ஒரு சினிமா நடிகையும் காதலில் இருந்தனர். கோலிவுட்டில் பல வருடங்களுக்கு முன் அறிமுகம் ஆனவர் அந்த ஹீரோயின். முதலில் சிறிய சிறிய படங்களில் நடித்து அதன்பின் வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தார்.

பிரபலமான படம்: முன்னணி நடிகர் ஒருவருடன் 2004ல் இவர் நடித்த படம் பெரிய ஹிட் அடித்தது. அந்த படத்தில் இருந்தே இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கவனிக்கப்பட்டார். அதன்பின் தமிழில் வரிசையாக நிறைய ஹிட் படங்களில் நடித்தார். இதனால் தெலுங்கு படங்களிலும் நடிக்க தொடங்கினார். தற்போது தமிழில் சோலோ படங்களிலும், பெரிய பட்ஜெட் படங்களிலும் நடித்து வருகிறார்.

ஹீரோவிற்கு திருமணம்: இந்த நிலையில் பெரிய குடும்பத்து நடிகரை இவர் தீவிரமாக காதலித்து வந்தார். அந்த நடிகரை இவர் திருமணம் செய்து கொள்வார் என்று நிறைய செய்திகள் வந்தது. ஆனால் கடைசியில் அந்த காதல் முறிந்து அந்த நடிகை மீண்டும் தமிழ் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார்.

இன்னொரு பக்கம் இந்த பெரிய குடும்பத்து நடிகருக்கும் திருமணம் ஆகிவிட்டது. தனது ஜாதியிலேயே பார்த்து சினிமாவில் தொடர்பில்லாத நபரை அந்த ஹீரோ கலயாணம் செய்து கொண்டார். இதுவும் பெரிய சர்ச்சையானது.

இதையடுத்து வேறு ஒரு தொழில் அதிபரை அந்த நடிகை திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் வந்தது. ஆனால் கடைசியில் இருவீட்டார் இடையே பேச்சுவார்த்தை வரை சென்று அந்த உறவும் முறிந்தது. இதனால் அந்த நடிகைக்கு திருமணம் மீதான நம்பிக்கையே போய்விட்டதாம். அதோடு இல்லாமல் தற்போது வேறு ஒரு ஆணுடன் அந்த நடிகை உறவில் இருக்கிறார்.

ரகசிய உறவு: இந்த நிலையில்தான் அந்த பெரிய குடும்பத்து ஹீரோவுடன் அந்த நடிகை மீண்டும் தொடர்பில் இருக்கிறார். அதன்படி குடும்பத்தில் மனைவியுடன் உறவு சலித்துவிட்ட காரணத்தால்.. வெளியே இந்த நடிகையுடன் உறவில் இருக்கிறாராம் அந்த ஹீரோ.

அதன்படி வீட்டை விட்டு அடிக்கடி ஷூட்டிங் என்று அந்த ஹீரோ செல்கிறார். அந்த நேரத்தில் அவர் அந்த நடிகையை அழைத்து உறவில் இருக்கிறாராம். அதோடு நிற்காமல் அடிக்கடி இவர்கள் வெளியூர்களுக்கு ஒன்றாக பயணம் செய்வதும் நடக்கிறதாம்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. அந்த நடிகையும் காதலில் இருக்கிறார். அவர் இருப்பது வேறு இந்தி நடிகரோடு., அவர்கள் நெருக்கமாக உள்ளனர். ஆனாலும் இன்னொரு பக்கம் இந்த பெரிய குடும்பத்து நடிகருடனும் ஜாலியாக இருக்கிறாராம். இந்த விவகாரம் பெரிய குடும்பத்தின் பெரியவருக்கு மட்டும்தான் தெரியவில்லையாம்.. குடும்பத்தில் மற்றவர்களுக்கு எல்லாம் தெரிந்துவிட்டதாம்.

மற்றவர்களுக்கு இந்த விஷயம் தெரிந்துவிட்டதால்.. பெரியவருக்கு விஷயம் தெரியாமல் கட்டிகாத்துக்கொண்டு இருக்கிறார்களாம். அது மட்டும் தெரிந்தால் குடும்பத்தில் பூகம்பமே வெடிக்கும் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X