twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷூட்டிங் விபத்து பற்றி இப்படியும் சொல்றாங்களே... பல பேர் உயிரைக் காப்பாற்றியது, அந்த விஷயம்தானாமே!

    By
    |

    சென்னை: இன்னும் அந்த விபத்தைப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா.

    கடந்த மாதம் அந்த புதன்கிழமை இரவில் நடந்த கொடூர விபத்து. யாரும் எதிர்பார்க்காத அந்த விபத்தில் பரிதாபமாக 3 பேர் பலியான சம்பவம் பேரதிர்ச்சி.

    படப்பிடிப்பில் விபத்து நடந்து இவ்வளவு நாட்கள் ஆனாலும் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை, இயக்குனரும் ஹீரோயினும்.

    பண உதவி

    பண உதவி

    ஹீரோவும் கூட அப்படித்தான். அன்று அந்த கிரேன் கொஞ்ச நேரம் முன்பு விழுந்திருந்தால், அந்த மூன்று பிரபலங்களின் உயிருக்கும் பெரிய ஆபத்து வந்திருக்கும் என்ற செய்தி எல்லோருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு இயக்குனரும் ஹீரோவும் பண உதவி செய்தாக அறிவித்து உள்ளனர்.

    ரத்து செய்தார்

    ரத்து செய்தார்

    பலியான அந்த உதவி இயக்குனர் பற்றி பலர் புகழ்ந்து பேசுகிறார்கள். அவ்வளவு துறுதுறுப்பான சிறந்த இயக்குனராம். படத்தைத் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் இந்த விபத்து காரணமாக தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்துவிட்டார். வழக்கமாக அவர் அன்று கொடுக்கும் நலத் திட்ட உதவிகளையும் நிறுத்திவிட்டார். விபத்தில் பலியானவர்களுக்கு அவர்களது லண்டன் ஆபீஸில் மவுன அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள்.

    நித்தம் ஒரு கதை

    நித்தம் ஒரு கதை

    இந்நிலையில் விபத்து பற்றி விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளிடம் ஹீரோ ஆஜராகி விளக்கம் அளித்துவிட்டு வந்திருக்கிறார். அவரிடம் சில மணி நேரமாக போலீசார் விசாரணை நடந்ததாக தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் விபத்து பற்றி சினிமா வட்டாரத்தில் நித்தம் ஒரு கதை சொல்கிறார்கள். அப்படி லேட்டஸ்டாக சொல்லப்பட்ட விஷயம் இது.

    பிரியாணி

    பிரியாணி

    அன்று படப்பிடிப்பு இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நடந்திருக்க வேண்டும். தொடர்ந்து நடக்கும்போது ஒவ்வொருவராக அவ்வப்போது சாப்பிட்டு வந்து வேலையில் சேர்ந்துகொள்வது வழக்கம். ஆனால், அன்று பிரியாணி வந்திருந்ததாம். அதனால்தான் உடனடியாக சாப்பாட்டுக்காக பிரேக் விட்டார்களாம். அந்த நேரத்தில்தான் கிரேன் அறுந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

    மீண்டும் ஷூட்டிங்

    மீண்டும் ஷூட்டிங்

    படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் போது, கிரேன் அறுந்து விழுந்திருந்தால் உயிர்ச்சேதம் இன்னும் அதிமாகி இருக்கும் என்கிறார்கள், பயத்தோடு. அதோடு, படத்தின் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்குவதை பற்றி இன்னும் படக்குழு பேசவில்லை. ஒவ்வொருவரும் ஷாக்கில் இருந்து மீளாததால், இன்னும் ஒரு மாதத்துக்குப் பிறகே ஷூட்டிங் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

    English summary
    gossips about that shooting spot accident
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X