'அவங்க எப்படியாவது நடிக்கணும்ங்க...' ஓவர் ஆர்வத்தில் தயாரிப்பு...அதிர்ச்சி அடைந்த நாயகியின் அப்பா!

By

சென்னை: அந்த ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க, கோதுமை நிற நடிகை சொன்ன சம்பளத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார் தயாரிப்பாளர்.

தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார் அந்த கோதுமை நிற ஹீரோயின். நடிப்பில் திறமை காட்டும் அந்த ஹீரோயின் கிளாமருக்கும் ரெடி.

பக்கா கமர்சியலான நடிகை என்று இன்டஸ்ட்ரியில் பெயர் பெற்ற அவர் தமிழ், தெலுங்கில் டாப் இடத்தில் இருக்கிறார்.

முன்னணி ஹீரோ

முன்னணி ஹீரோ

இந்தியிலும் சில படங்களில் நடித்து வருகிறார். ஆனால், அவர் நடித்த இந்தி படங்கள் பெரிதாக பேசப்படவில்லை என்பதால், தென்னிந்திய சினிமாவுக்கே இப்போது முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தெலுங்கில் சில முன்னணி ஹீரோ படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். சமீபத்தில் அந்த பாபுகாரு படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.

நடிக்க மறுப்பு

நடிக்க மறுப்பு

இதற்காக அவருக்கு ஸ்பெஷல் சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அந்த மில்க்கான சீனியர் ஹீரோவுக்கு, ஹீரோயினாக நடிக்க கோதுமை நடிகையிடம் பேசியுள்ளனர். அதற்கு முன், அவர்கள் ஒரு பெரிய லிஸ்ட் போட்டு பல ஹீரோயின்களிடம் கேட்டும் யாரும் நடிக்க மறுத்து விட்டனர். அவருடன் நடித்தால் இளம் ஹீரோக்கள் அழைக்க மாட்டார்கள் என்பதுதான் மறுப்புக்கு காரணமாம்.

படாதபாடு

படாதபாடு

இந்த நிலைமை தெலுங்கு மெகா ஸ்டாருக்கே நடந்திருக்கிறதாம். 'மூத்த ஹீரோக்களுக்கு ஹீரோயினை பிடிக்கிறதுக்குள்ள படாதபாடு பட வேண்டியிருக்கு?' என்று நேரடியாகச் சொல்கிறார்கள், சினிமா வட்டாரத்தில்! இந்நிலையில்தான், அந்த கோதுமை நிற நடிகையின் அப்பாவிடம் கால்ஷீட் கேட்டுப் பேசியிருக்கிறார்கள், படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும்.

அப்பா அதிர்ச்சி

அப்பா அதிர்ச்சி

இந்தப் படம் வேற லெவல்ல ஹிட்டாகும். கண்டிப்பாக நடிக்கச் சொல்லுங்க' என்றாராம் அந்த தயாரிப்பாளர். தொடர்ந்து வற்புறுத்த, அவரது ஓவர் ஆர்வத்தைக் கண்டு நடிகையின் அப்பா அதிர்ச்சியே அடைந்து விட்டாராம். 'இவ்வளவு ஆர்வமா இருக்காரே' என்று யோசித்த நடிகையின் அப்பா, அப்படின்னா இவ்வளவு சம்பளம் வேணும் என்று மூன்று விரல்களை காண்பித்து இருக்கிறார்.

இவ்வளவு வேணும்

இவ்வளவு வேணும்

'அவ்வளவு கோடியா? என்று திகைத்தாராம் தயாரிப்பு. 'வழக்கமா ஒன்றரை, ரெண்டு தான வாங்குறீங்க?' என்று கேட்டாராம், அந்தத் தயாரிப்பாளர். அது மற்றவங்களுக்கு, இவருக்குன்னா இவ்வளவு வேணும் என்று கோதுமையின் தந்தைக் கேட்க, சத்தம் போடாமல் திரும்பி யிருக்கிறார், தயாரிப்பாளர். இப்போது அங்காடி நடிகையும், ரெயின் நடிகையும் அந்தப் படத்தில் நடிப்பதாகக் கேள்வி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X