தயாரிச்ச எல்லா படமும் ஃபிளாப்... அந்த பீரியட் படத்தோட மூட்டை முடிச்சை கட்டிருவாங்களாமே!

By

சென்னை: அந்த வரலாற்று படத்துடன், தயாரிப்பதை நிறுத்த முடிவு செய்திருக்கிறதாம், அந்த பிரபல சினிமா நிறுவனம்.

தமிழ் சினிமாவில் படத் தயாரிப்புக்கு என்று சில பெரிய நிறுவனங்கள் மட்டுமே ஒரு காலத்தில் இருந்தன. அடுத்து புதிய தயாரிப்பாளர்கள் வந்தார்கள்.

சினிமா பிசினஸ் தெரியாததால் பல தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்தித்து, சினிமாவே வேண்டாம் என்று சென்றுவிட்டனர்.

சினிமா பிசினஸ்

சினிமா பிசினஸ்

இப்போது சினிமா மொத்தமாக மாறிவிட்டதால், ஆரம்ப காலத்தில் இருந்தே படம் தயாரித்து வந்த சில நிறுவனங்கள், படம் தயாரிப்பதை நிறுத்துவிட்டன. சில நிறுவனங்கள் தெலுங்கு மொழிகளில் தயாரித்து வருகின்றன. தமிழ் சினிமா பிசினஸ் மொத்தமாக சிக்கலில் இருப்பதால், பலர் தவித்து வருகின்றனர். இருந்தாலும் அதைக் கைவிட்டுவிடாமல், தயாரித்து வருகிறார்கள் சில மூத்த தயாரிப்பாளர்கள்.

கார்பரேட் நிறுவனம்

கார்பரேட் நிறுவனம்

பழைய தயாரிப்பாளர்களில், விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் மட்டுமே இப்போதும் படம் தயாரித்து வருகிறார்கள். அதுவும் தொடர்ந்து தயாரிப்பதில்லை. இதற்கிடையே சில கார்பரேட் நிறுவனங்கள், தமிழ் சினிமாவில் கால்பதித்து நஷ்டங்களை சந்தித்துவிட்டு, திரும்பியது. பிறகு ஹீரோக்கள், இயக்குனர்களே சொந்தமாக படம் தயாரிக்கத் தொடங்கினர். சிலருக்கு லாபம், சிலருக்கு நஷ்டம்.

மொத்தவும் அவுட்

மொத்தவும் அவுட்

இந்த நிலையில்தான் வெளிநாட்டில் இருந்து வந்தது, அந்த தயாரிப்பு நிறுவனம். பெரும் பணத்தை வைத்திருக்கும் நிறுவனம் என்பதால், ஏகப்பட்ட படங்களைத் தயாரித்தது. இதில், தமிழ் சினிமாவில் யாருமே யோசித்திராத கோடிகளில் உருவாக்கப்பட்ட மெகா பட்ஜெட் படங்களும் உண்டு. இப்படி அவர்கள் தயாரித்த படங்களில் ஒன்றிரண்டை தவிர மொத்தவும் அவுட்.

மீண்டும் மெகா பட்ஜெட்

மீண்டும் மெகா பட்ஜெட்

எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் என்பது மாதிரி மீண்டும் மெகா பட்ஜெட்டுக்குள் கால் வைத்தது அந்த நிறுவனம். அதில் ஒன்றுதான் சமீபத்தில் விபத்தைச் சந்தித்த அந்த இரண்டாம் பாகம் படம். இதன் பட்ஜெட், சுமார் 200 கோடி ரூபாய் என்கிறார்கள். ஏற்கனவே, விபத்து, அடுத்து கால்ஷீட் பிரச்னை, அதிகமாகும் ஷூட்டிங் நாட்கள் என சிக்கல் இருப்பதால் இந்த படம் லாபம் கொடுக்கும் என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.

நம்பிக்கை இல்லை

நம்பிக்கை இல்லை

இதோடு அடுத்து அந்த பீரியட் படத்தையும் அந்நிறுவனம் தயாரித்து வருகிறது. அதற்கான பட்ஜெட் கேட்டால், அதுவும் பல கோடிகள் என்கிறார்கள். இப்படி கோடிகளை கொட்டி, எடுக்கப்படும் படங்கள் மீது எந்த நம்பிக்கையும் இல்லை என்பதால், இந்த படங்களோடு படத் தயாரிப்பை அந்த நிறுவனம் நிறுத்திவிட முடிவு செய்திருக்கிறது என்று பேசுகிறார்கள் கோலிவுட்டில்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X