விபத்துக்குப் பிறகு கோர் கமிட்டி கூடி முடிவெடுக்கப் போகுதாம்...ஷூட்டிங் தொடங்குமோ, தொடங்காதோ?

By

சென்னை: அந்த விபத்துக்குப் பிறகு, தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் விரைவில் கூடி படத்தை தொடங்குவது பற்றி முடிவெடுக்க இருப்பதாகச் சொல்கிறார்கள்.

கடந்த மாதம் ஒரு புதன்கிழமை இரவில் நடந்தது, அந்த விபத்து. யாரும் எதிர்பார்க்காத அந்த விபத்தில் பரிதாபமாக 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சிதான்.

விபத்து நடந்து இவ்வளவு நாட்கள் ஆனாலும் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை படக்குழுவினர்.

விபத்து காரணமாக

விபத்து காரணமாக

அன்று அந்த கிரேன் கொஞ்ச நேரம் முன்பு விழுந்திருந்தால், அந்த மூன்று பிரபலங்களின் உயிருக்கும் பெரிய ஆபத்து வந்திருக்கும் என்ற செய்தி எல்லோருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு இயக்குனரும் ஹீரோவும் பண உதவி செய்தாக அறிவித்து உள்ளனர். இந்த விபத்து காரணமாக படத்தைத் தயாரிக்கும் நிறுவனத் தின் உரிமையாளர் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்து இருக்கிறார்.

மீண்டும் ஷூட்டிங்

மீண்டும் ஷூட்டிங்

இந்த விபத்து பற்றி விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளிடம் ஹீரோவும் இயக்குனரும் ஆஜராகி விளக்கம் அளித்துவிட்டு வந்திருக்கின்றனர். இந்நிலையில் விபத்து பற்றி சினிமா வட்டாரத்தில் ஒவ்வொரு கதை சொல்கிறார்கள். படத்தின் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்குவது பற்றி இன்னும் படக்குழு பேசவில்லை. இன்னும் ஒரு மாதத்துக்குப் பிறகே ஷூட்டிங் தொடங்கும் என்று கூறப்பட்டது.

பிரச்னை

பிரச்னை

இதற்கிடையே, படத்தின் ஹீரோவுக்கும் தயாரிப்புக்கும் பிரச்னை என்றும் இதனால் படம் மீண்டும் தொடங்குவது சந்தேகம்தான் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில்தான் அந்த தயாரிப்பு நிறுவனத்தின், முக்கிய நிர்வாகிகளை கொண்ட கோர் கமிட்டி, விரைவில் கூட இருக்கிறதாம். இந்த கமிட்டிதான், படத்தை மீண்டும் தொடங்குவதா, தொடங்கினால் ஏற்படும் லாப நஷ்ட கணக்குகள் எப்படி இருக்கும் என்பது பற்றி விவாதிக்க இருக்கிறது என்கிறார்கள்

வேறு படங்களில் பிசி

வேறு படங்களில் பிசி

படத்தின் ஹீரோ, ஏற்கனவே இந்த நிறுவனத்துக்காக ஆரம்பித்த அந்த காமெடி படம், கிடப்பில் இருக்கிறது. இப்போது இந்தப் படத்தில் நடிக்க வேண்டிய நடிகர், நடிகைகள் வேறு படங்களில் பிசியாகி விட்டார்கள். அவர்களை மீண்டும் அழைத்து வந்த ஷூட்டிங் நடத்துவது எளிதானதுதானா? அப்படியே ஷூட்டிங்கை தொடங்கினாலும் செலவை சரிகட்ட முடியுமா?

மோசமான நஷ்டம்

மோசமான நஷ்டம்

படத்தை அந்தளவுக்கு பிசினஸ் பண்ண முடியுமா? என்பது பற்றியும் பேச இருக்கிறார்களாம். அதற்கு பிறகே ஷூட்டிங் மீண்டும் தொடங்குவது பற்றி தெரிய வரும் என்கிறார்கள். ஏற்கனவே இந்த நிறுவனம் தயாரித்த சில படங்கள் மோசமான நஷ்டத்தை சந்தித்து இருப்பதால், படத்தை இந்த செலவோடு விட்டுவிடலாமா, தொடங்கலாமா என்பது பற்றி அந்த கோர் கமிட்டிதான் முடிவு செய்யுமாம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X