நம்மளையும் கழட்டிவிட்டுடுவாரோ.. எப்படி சம்மதிக்க வைக்கிறது.. காதலியால் பீதியில் பிரபல இயக்குநர்!
சென்னை: காதலி நடிகையின் முடிவால் பிரபல இயக்குநர் பீதியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அந்த நம்பர் நடிகை. முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வரும் அவர், கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்.
சம்பள விஷயத்தில் கறாரானவர் என்ற பெயரும் உண்டு. சம்பள பாக்கியால் உச்ச நடிகரின் படத்திலேயே முரண்டு அறையை விட்டு வெளியே வர மறுத்ததாகவெல்லாம் தகவல் வெளியானது.

கணவன் மனைவியாக
ஏற்கனவே இரண்டு நடிகர்களுடன் காதல், பிரேக் அப் என அனுபவமுள்ள அந்த நடிகை தற்போது இளம் இயக்குநர் ஒருவருடன் காதலில் லயித்து வருகிறார். திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார்.

தனிமையில் ரொமான்ஸ்
அடிக்கடி வெளி நாடுகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் ரிலாக்ஸ் செய்து கொள்ள ஜோடியாக அவ்வப்போது விமானத்தில் பறந்து வருகின்றனர். இருவரும் தனிமையில் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களும் வெளியாகி 90ஸ் கிட்ஸ்களை புலம்ப வைக்கும்.

லிவிங் டூ கேதரிலேயே
இந்நிலையில் நம்பர் நடிகை தற்போதும் திருமணத்தை தள்ளி போட்டுக் கொண்டே வருகிறாராம். சாதிக்க வேண்டும், விருது வாங்க வேண்டும் அப்படி இப்படி என ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி லிவிங் டூ கேதரிலேயே காலத்தை கழிக்கிறாராம்.

நழுவும் நடிகை
ஆனால் காதலரின் குடும்பத்தினரோ, எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க போகிறாய்? காலா காலத்துக்கு கல்யாணத்தை பண்ணு என அழுத்தம் கொடுத்து வருகிறார்களாம். திருமணத்தை பற்றிய பேச்சை எடுத்தாலே அம்மணி அது இது என எதாவது காரணத்தை சொல்லி நழுவி விடுகிறாராம்.
Recommended Video

பீதியில் காதலர்
இதனால் நம்மையும் கழட்டி விட்டுவிடுவாரோ என பீதியில் உள்ளாராம் காதலர். மேலும் அம்மணியை எப்படி சம்மதிக்க வைப்பது என்றும் நட்பு வட்டாரத்தில் டிஸ்கஸ் செய்வதுடன் ஆழ்ந்த யோசனையில் உள்ளாராம். இதன் அப்டேட்டாக வெளியான தகவல்தான் நடிகையின் கல்யாண கண்டிஷன்.


Click it and Unblock the Notifications











