அனைத்து வசதிகளுடன் மாடர்னாக வீட்டை மாற்றிய டாப் ஹீரோ...பட ரிலீஸ் முடிஞ்சதும் மாறப் போறாராமே?

By

சென்னை: புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட தனது சென்டிமென்ட் வீட்டுக்கு பட ரிலீஸ் முடிந்ததும் செல்ல முடிவு செய்திருக்கிறார், அந்த டாப் ஹீரோ.

அந்த டாப் ஹீரோ படம், அடுத்த மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது மியூசிக் விழா.

அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பை இன்னும் வெளியிடாமல் இருக்கிறார் ஹீரோ.

சொல்லப்படாத கதை

சொல்லப்படாத கதை

இருந்தாலும் அந்த கன் இயக்குனர் கதையை, பரபரப்பாக உருவாக்கிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் கோலிவுட்டில். அந்தப் படத்தின் இரண்டாம் பாகம்தான் என்றாலும் தமிழில் சொல்லப்படாத கதைக் களத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் படமாம் இது. முழுக் கதையையும் ஹீரோ கேட்டிருப்பதால், அதை அவசரம் அவசரமாக உருவாக்கி வருகிறார்கள்.

நான்கைந்து வீடு

நான்கைந்து வீடு

இதற்கிடையே கொரோனா வைரஸ் காரணமாக ஷூட்டிங்கை நிறுத்து விட்டார்கள். வெளிநாடு, வெளியூர் பயணங்களைத் தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதால், டாப் ஹீரோ இப்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் என்கிறார்கள். ஹீரோவுக்கு சென்னையில் நான்கைந்து வீடுகள் இருக்கிறது. ஆனால், அவர் வசிப்பது கடற்கரை சாலையில் இருக்கும், மூத்த இயக்குனரது வீட்டுக்கு அருகில்.

சென்டிமென்ட் வீடு

சென்டிமென்ட் வீடு

இன்னொரு வீடு அதே சாலையில் வேறொரு இடத்தில் இருக்கிறது. சமீபத்தில் நடந்த சோதனை கூட, இந்த இரண்டு வீடுகளில்தான் நடந்தது. மீடியாவிலும் இந்த வீடுகள் அடிபட்டன. இந்நிலையில் மூத்த இயக்குனர் வீடு அருகில் உள்ள தனது சென்டிமென்ட் வீட்டை, கடந்த சில மாதங்களாகப் புதுப்பித்து வந்தார் ஹீரோ.

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை

அதாவது சகல வசதிகளுடன் கூடிய வீடாக அதை மாற்றி இருக்கிறார். இந்த வீட்டில் சின்ன சின்ன வேலைகள் இன்னும் நடந்து வருகிறதாம். அதன் காரணமாக, மற்றொரு வீட்டில் இப்போது வசித்து வரும் டாப் ஹீரோ, அடுத்த மாதம் இந்த வீட்டுக்கு குடி வரப்போகிறார். பட ரிலீஸ் முடிந்ததும் வருகிற ஒரு வெள்ளிக்கிழமை அன்று, இதற்கான விழா சிறப்பாக நடக்க இருக்கிறது என்கிறார்கள், கோலிவுட்டில்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X