அதிகமா படமே இல்லை... ஆனா, சொத்துகளா குவிக்கிறாராமே அந்த நடிகை...ஆச்சரியப்படும் ஹீரோயின்கள்!

By

சென்னை: அந்த நடிகை, அதிகமான படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சொத்துக்களாக வாங்கிக் குவிப்பது எப்படி என்று ஆச்சரியப்படுகிறார்கள் மற்ற நடிகைகள்.

சினிமாவில் ஹீரோயின்களுக்கான காலம் குறைவுதான். ஹீரோக்கள் போல பல வருடங்கள் தாக்குப் பிடிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை.

சில நடிகைகள் மட்டுமே பல வருடங்கள் தாக்குப் பிடித்து நடிக்கின்றனர். அதற்கு திறமையுடன் அதிர்ஷ்டமும் அவசியம் என்கிறார்கள்.

வாய்ப்புப் போட்டி

வாய்ப்புப் போட்டி

ஒவ்வொரு வாரமும் புது புது ஹீரோயின்கள் இறக்குமதி ஆகின்றனர், ஒவ்வொரு மொழி சினிமாவிலும். திறமை இருக்கும் நடிகைகள் சத்தம் போடாமல் அடுத்த வாய்ப்புக்கு காத்திருக்க, சிலர் பட வாய்ப்புக்காக, போட்டிகளில் இறங்குகிறார்களாம். மற்ற நடிகைகளுக்கு வரும் வாய்ப்புகளை எப்படியாவது லபக்குவது அதில் ஒரு வகை.

மற்ற மொழிகள்

மற்ற மொழிகள்

இதுவும் ஹீரோயின்கள், அதிக காலம் தாக்குப் பிடிக்காமல் இருக்க காரணம் என்கிறார்கள். அதையும் தாண்டி, நின்று நிலைப்பது ஒரு சிலர் மட்டுமே! அப்படியான நடிகைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். நான்கைந்து பேர்தான் இருப்பார்கள். மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்துவதும் நிலைத்து நிற்பதற்கு காரணம்.

தமிழில் அறிமுகம்

தமிழில் அறிமுகம்

அந்த உயர நடிகை பக்கத்து மாநிலத்தில் இருந்து வந்தவர். தமிழில்தான் ஹீரோயினாக அறிமுகமானார். பிறகு தொடர்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக நடித்தாலும் சொல்லிக் கொள்ளும்படி படங்கள் அமையவில்லை. அக்கம் பக்கத்து மாநில படங்களிலும் நடித்து வருகிறார் அவர். அங்கும் சிறப்பான படங்கள் இல்லை, நடிகைக்கு.

பப்ளிசிட்டி

பப்ளிசிட்டி

சும்மா ஊறுகாய் மாதிரிதான் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், கிரிக்கெட் வீரர் ஒருவருடன் நடிகை கிசுகிசுக்கப்பட்டார். அவருடன் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகை, அதை வைத்தே பப்ளிசிட்டியை பக்காவாகப் பண்ணினார். அதைப் பட வாய்ப்புக்குப் பயன்படுத்திக் கொண்டார். இருந்தாலும் ஒர்க் அவுட் ஆகவில்லை.

பிகினி போட்டோ

பிகினி போட்டோ

இதனால் எவ்வளவு கிளாமராக இறங்க முடியுமோ, அவ்வளவு இறங்கி போட்டோஷூட் நடத்தி அதை வெளியிட்டு வந்தார். இதில் பிகினி போட்டோக்களும் விதிவிலக்கு அல்ல. அதற்கும் அதிக ரெஸ்பான்ஸ் இல்லை. ஆனால், நடிகைக்கு அதிக வாய்ப்புகள் இல்லை என்றாலும் முக்கியமான மூன்று நகரங்களில் சொத்துகளாக வாங்கி குவித்து இருக்கிறார் என்கிறார்கள்!

எப்படி வந்திருக்கும்?

எப்படி வந்திருக்கும்?

பாலிவுட்டில், அந்த பிரபலங்கள் வசிக்கும் ஏரியாவில் கூட நடிகைக்கு சொத்து இருப்பதாகச் சொல்கிறார்கள். பட வாய்ப்பு அதிகம் இல்லாத நிலையில் நடிகைக்கு இவ்வளவு சொத்து எப்படி வந்திருக்கும் என்று கிசுகிசுக்கிறார்கள், சில நடிகைகள். அந்த டெக்னிக்கை பயன்படுத்தி தாங்களும் சொத்துக்களாக வாங்கலாமே என்கிற ஆசைதானாம் அவர்களுக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X