கோலிவுட்ல இதான் ஹாட் நியூஸ்.. ஹோம்லி லுக் நடிகைக்கும், சீனியர் நடிகருக்கும் பத்திக்கிச்சாம்!
Recommended Video
சென்னை: தமிழில் அதி வேகத்தில் வளர்ந்து வரும் ஒரு குடும்ப பாங்கான முன்னணி நடிகைதான், இப்போ கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்.
இவரா இப்படி என்று வாயடைத்துக் கிடக்கிறது சக நடிகைகள், நடிகர் வட்டாரம். உங்களுக்கே இது ஷாக்கிங்காகத்தான் இருக்கும்.
டிவி பின்புலத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் அந்த நீண்ட பெயர் கொண்ட நடிகை. ஹீரோயினாக கால் பதித்த முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். புடவை கட்டியபடி பாந்தமாக காட்சியளித்து ரசிகர்கள் மனதில் இன்னொரு தேவயானி போல பார்க்கப்பட்டார்.

குடும்ப பாங்கு
முதல் படத்தில் மூன்றெழுத்து இளம் ஹீரோவுடன் நடித்த அந்த நீண்ட பெயர் நடிகை, இதன்பிறகு சிறுத்தை ஹீரோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்போது வரிசையாக அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளன. ஆனால், முன்னணி ஹீரோயின் என்ற அந்தஸ்தை அடைய முடியவில்லை.

ஆங்கில பெயர் படம்
இந்த நிலையில்தான், ஆங்கில பெயர் கொண்ட ஒரு படத்தில், ரெண்டெழுத்து இன்ஷியல் கொண்ட இயக்குநர் டூ ஹீரோவான நடிகருடன் ஜோடி சேர்ந்தார். அந்த இயக்குநர் பற்றி 90ஸ் கிட்ஸ் நன்கு அறிவார்கள். படத்தில் புக் செய்த ஹீரோயினுடன் மும்பை போனால் ஒரு வாரம் ஹோட்டல் ரூம் கதவை திறக்கவே மாட்டார் மனுஷன் என்று பிரமிப்போடு சொல்வார்கள் அப்போதே.

பஞ்சும், நெருப்பும்
இப்போது பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதால், இன்ஷியல் இயக்குநரின், யானைப் பசிக்கு சோளப்பொரிதான் கிடைத்துவருகிறது. இப்படி ஒரு சான்ஸ் கிடைத்தால் விடுவாரா மனுஷன். நீண்ட பெயர் நடிகையோடு கெமிஸ்ட்ரி பற்றிக்கொண்டதாம். "அவரோடு நடிக்காதன்னு சொன்னோம். கேட்டுச்சா இந்த பொண்ணு. இப்போ பாருங்க, கோலிவுட் முழுக்க இவுங்க பண்ற கூத்து பற்றிதான் பேச்சா இருக்கு" என்று நம்மிடம் சொல்லி அங்கலாய்த்தார் சீனியர் நடிகை ஒருவர்.

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
இப்போதான், கேரியர் பிக்அப் எடுத்து போகுது. இப்போ போய் அந்த அல்ட்ரா சீனியர் இயக்குநரோடு கிசுகிசுன்னா இந்த பொண்ணு சினிமா எதிர்காலம் என்ன ஆகும் அப்படீன்னு நலம் விரும்பிகள் பலரும் கவலைப்படுறாங்க. மான்கள் மேயாதவரைதான் அது புல்வெளி. அப்படி ஒன்னு நடந்துட்டா அதற்கு பிறகு பழைய துணி. இதுதான் கோலிவுட்டில் பேசப்படும் பிரபல பஞ்ச். அது இந்த நாயகிக்கும் நடக்குதே என்று ரசிகர்களுக்கும் கொஞ்சம் வருத்தம்தான்.


Click it and Unblock the Notifications











