»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

சண்டியர் படக் குழப்பங்கள் ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் தனது சொந்த வாழ்க்கையில் மிகவும் தெளிவாகஇருக்கிறார் கமல் என்பது தெரிகிறது.

மனைவி சரிகாவை விட்டுப் பிரிந்த கமலுக்கும் கணவரை விட்டு பிரிந்த கெளதமிக்கும் இடையிலான பழையநட்பு மீண்டும் துளிர்த்தும். சண்டியர் படத்துக்கு நிர்வாகியாக கெளதமி செயல்பட்டு வருவதும் பழைய செய்தி.

இப்போது இந்த இருவரிடையிலான நெருக்கம் அதிகமாகி நட்பையும் தாண்டிய உறவாக மாறிக் கொண்டுள்ளது.

சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லேண்ட்மார்க் புத்தக கடைக்கு கமலும், கெளதமியும் வந்திருந்தனர்.கெளதமி தன் குழந்தையுடன் வந்திருந்தார்.

சுமார் 2 மணி நேரம் கடைக்குள் இருந்த கமலும், கெளதமியும் ஏராளமான புத்தகங்களை வாங்கிக் குவித்தனர்.

இதில் விசேஷம் என்னவென்றால், கெளதமியின் குழந்தையை தூக்கிக் கொண்டு கடைக்குள் கமல் உலவியதுதான்.

புத்தகம் வாங்க வந்தவர்கள் கமலையும், கெளதமியையும் ஆச்சரியத்துடன் பார்த்தபடி வந்த விஷயத்தை மறந்துவிட்டு வாய் பிளந்தவாறு நின்றிருந்தனர். 2 மணி நேர புத்தக தேடலுக்குப் பின் கமலும், கெளதமியும் காரில் ஏறிப்பறந்தனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil