மாஸ்டருனா... அய்யோ, நான் மாட்டேன்பா! - அலறிய பேத்தி நடிகை!
பழைய நடிகர் ஒருவரின் பேத்தி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தாடி ஹீரோ மற்றும் அரசியல் வாரிசுக்கு ஜோடியாக படங்களில் நடித்தார். சமீபத்தில் கூட சேது நடிகருடன் ஒரு படத்தில் நடித்திருந்தார். படம் சுமாராகப் போனாலும் பேத்தி நடிகைக்கு நல்ல பெயர். சம்பளமும் கிர்ர்.
மாஸ்டர் நடிகர் திலக வாரிசுடன் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு நடித்து வெளியான அயல் நாட்டு காமெடி நடிகரின் பெயர் கொண்ட படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
இதில் மாஸ்டருக்கு ஜோடியாக பேத்தி நடிகையை நடிக்க வைக்க முயற்சித்தனர். ஆனால் நடிகை மறுத்து விட்டாராம்.
கால்ஷீட் இல்லை என்று சொன்னாலும் கூட ஹீரோவுக்கு கிட்டத்தட்ட தன் அப்பா வயது என்பதால்தான் மறுத்தார் என்று ஒரு தகவல் ஓடுகிறது.
அட வயசை விடும்மா... அந்த இளமை துள்ளும் நடனத்துக்காகவே ஒருவாட்டி நடிக்க ஓகே சொல்லிருக்கலாமே!
Comments


Click it and Unblock the Notifications