»   »  அந்தப் படம் மாதிரியே கதை வேணும்… அடம் பிடிக்கும் பசுமை தயாரிப்பாளர்!

அந்தப் படம் மாதிரியே கதை வேணும்… அடம் பிடிக்கும் பசுமை தயாரிப்பாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இசை வாரிசு ஹீரோவாக நடித்த இரண்டு முன்னணி ஹீரோயின்களை பெயரில் கொண்ட படம் வெளியானது. படம் முழுக்க இரட்டை அர்த்த வசனங்கள் இருந்ததால் விமர்சகர்கள் கழுவி கழுவி ஊற்றினாலும் கூட வசூலில் பட்டையை கிளப்பியது படம்.

அந்த படத்தின் வெற்றியால் அதனை வாங்கி வெளியிட்டு ருசி கண்ட பசுமை தயாரிப்பாளர் தங்களிடம் கதை சொல்லவரும் உதவி இயக்குநர்களிடம் அதேபோன்ற இரட்டை அர்த்த காமெடி தூக்கலான படங்களாகவே எதிர்பார்க்கிறாராம். இந்த மாதிரி கதை பண்ணுங்க... என்று ஓப்பனாகவே கேட்கிறாராம்.

உங்க வீட்டுல ரெண்டு ஹீரோ, ஒரு ஹீரோயின் இருக்காங்க... அவங்களை வெச்சு எடுக்க வேண்டியதுதானே... என்றபடியே புலம்பிக்கொண்டு திரும்புகின்றனர் இளம் இயக்குநர்கள்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
That green company producer expected double meaning comedy subjects only from, young directors.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil