»   »  கடும் பண நெருக்கடியில் பசுமை தயாரிப்பாளர்?

கடும் பண நெருக்கடியில் பசுமை தயாரிப்பாளர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஃப்ரெண்ட்ஷிப்பை சொல்லும் படத்தை தம்பியை வைத்து தயாரித்தது தம்பியின் குடும்ப நிறுவனம். அந்த படத்திற்கு கொடுத்த கால்ஷீட்டை உலக நாயகனின் வாரிசு மாற்றி டைகர் படத்துக்கு கொடுத்துவிட்டதாக புகார் சொல்லி அது பெரிய பிரச்னையாகவும் ஆனது. பின்னர் வெள்ளை நடிகையை அதில் ஹீரோயினாக்கினார்கள்.

இப்போது அதே உலக வாரிசு அதே நிறுவனம் தயாரிக்க அண்ணன் நடிக்கும் மூன்றாம் பாகத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். நடிகை கால்ஷீட் கொடுத்த தேதிகளில் படப்பிடிப்பு நடத்த முடியவில்லையாம்.

Green producer in financial crunch?

‘என் கால்ஷீட்டை வீணடிச்சுட்டீங்க... இனிமே கேட்டால் தர மாட்டேன்' என்று கறாராக சொல்லிவிட்டு அப்பா படத்துக்காக அமெரிக்கா போய் விட்டாராம் நடிகை.

படப்பிடிப்பு தடைபட்டு நிற்க உண்மையான காரணம் பண நெருக்கடியாம். பெயரிலேயே பசுமையை வைத்துக்கொண்டு இரண்டு ஹீரோக்களையும் கையில் வைத்துக்கொண்டு பண நெருக்கடி என்று சொல்வதை நம்மாலும்தான் நம்ப முடியவில்லை...!

English summary
According to close sources, Green producer is suffering financial crisis for the third sequel of Lion movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil