வருமான வரித்துறையின் தீவிர கண்காணிப்பில் பசுமை தயாரிப்பாளர்!
மன்னார்குடி குடும்பத்தை அடுத்து வருமான வரித் துறையின் தீவிர கண்காணிப்பு பட்டியலில் இணைந்துள்ளாராம் பசுமை தயாரிப்பாளர். எல்லாம் அந்த 100 கோடி மேட்டர்தான் என்கிறார்கள்.
மன்னார்குடி குடும்பத்தின் மீது நடந்த மெகா ரெய்டில் பசுமை தயாரிப்பாளர் அந்த குடும்பத்தை 100 கோடி ஏமாற்றியது தெரிய வந்தது. இந்த பணத்துக்கு நான் கணக்கு வழக்கு எல்லாம் கரெக்டா வெச்சிருக்கேன். என்னை ஒண்ணும் பண்ண முடியாது என்று மன்னார்குடி குடும்பத்துக்கே சவால் விட்டிருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
எனவே அந்த பசுமை தயாரிப்பாளரின் எல்லா சோர்ஸ்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது ஐடி வட்டாரம் என்கிறார்கள். விரைவில் ரெய்டு கன்பர்மாம். கைதும் இருக்கலாம் என்கிறார்கள்.
முன் ஜாமீன் ரெடியா?


Click it and Unblock the Notifications











