நம்பர் நடிகைக்கு க்ரீன் சிக்னல்.. சமத்து நடிகைக்கு ரெட் சிக்னல்!

சமீபத்தில் வெளியான பிரம்மாண்ட படத்தில் தனக்கு கிடைத்த வரவேற்பால் சமத்து நடிகை படத்தில் இரண்டாம் நாயகி ரோல் வேண்டாம் என ஒதுங்கியுள்ளார் அந்த தேவி நடிகை.

ஐதராபாத்: நம்பர் நடிகையுடன் சமீபத்தில் பிரம்மாண்ட படத்தில் நடித்த தேவி நடிகை, அடுத்ததாக தெலுங்கில் சமத்து நடிகையுடன் நடிக்க ஒப்பந்தமான படத்தில் இருந்து நைசாக எஸ்கேப் ஆகியுள்ளார்.

கதை பிடித்திருக்கிறது கால்ஷீட் தான் பிரச்சனை என படக்குழுவும் பூசலை பூதாகரமாக மாற்றாமல் புஷ்வானமாய் மாற்றும் முயற்சியில் முட்டு கொடுத்து வருகின்றனர்.

நம்பர் நடிகை ஓகே

நம்பர் நடிகை ஓகே

உடல் எடை குண்டான நடிகையுடன் பிரம்மாண்ட படத்தில் நடித்த தேவி நடிகை, அடுத்ததாக அதேபோன்றதொரு பிரம்மாண்ட படத்தில் நம்பர் நடிகையுடன் நடிக்க ஒத்துக் கொண்டார். ஆனால், தனக்கு தனி முக்கியத்துவம் கதையில் இருக்கவேண்டும் என்றும் காது கடித்துள்ளார்.

அடித்தது ஜாக்பாட்

அடித்தது ஜாக்பாட்

அவர் எதிர்பார்த்தது போலவே சமீபத்தில் வெளியான சுதந்திர போராட்ட வீரர் படத்தில் அவருக்கான ஸ்கோர் அதிகரித்து இருந்தது. மேலும், 2 கோடி மதிப்பிலான ஜாக்பாட் பரிசும் தேவி நடிகைக்கு தயாரிப்பு தரப்பிடம் இருந்து கிடைத்துள்ளது. இதனால், உச்ச கட்ட மகிழ்ச்சியில் அம்மணி இருக்கிறார்.

சமத்து நடிகைக்கு நோ

சமத்து நடிகைக்கு நோ

தொடர்ந்து இரண்டாவது நடிகையாக நடித்து வருவது தனது எதிர்காலத்தை பாதிக்கும் என்று சிலர் கூறிய அறிவுரைகளை கேட்டதன் பேரில் அந்த தேவி நடிகை, முன்னதாக சமத்து நடிகையுடன் பேய் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது திடீரென அதிலிருந்து விலகியுள்ளார்.

முதலிடம்

முதலிடம்

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என தொடர்ந்து வாய்ப்புகள் வருவதால், தேவி நடிகை படு பிஸி ஆகியுள்ளார். சமீபத்தில் வெளியான பேய் படமும் பெரிய படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகாத நிலையில், ரிலீஸ் ஆனதனால் கல்லா கட்ட தொடங்கியுள்ளதால், இனி தான் விட்ட முதலிடத்தை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X