கட்டுமஸ்தான நடிகரை கழட்டிவிட்ட கொழு கொழு நடிகை..4 பிரபலங்களுடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்!
சென்னை: திருமணமே வேண்டாம் ரிலேஷன்ஷிப் மட்டும் போதும் என வாழ்ந்து வந்த கொழு கொழு நடிகை தற்போது ஒண்டிக்கட்டையாக இருக்கிறார்.
மாடல் அழகியான இவர் பாலிவுட்டில் ஒரு சில விளம்பரப்படங்களிலும், திரைப்படங்களிலும் நடித்து ஓர் அளவிற்கு பிரபலமானார்.

கொழு கொழு நடிகை: பாலிவுட்டில் பிரபலமான பிறகு கோலிவுட்டில் ஒரு பிரம்மாண்டமான படத்தில் எண்ட்ரி கொடுத்தார். முதல் படமே சூப்பர் டூப்பர் அடித்ததை அடுத்து கொழு கொழு நடிகைக்கு பட வாய்ப்புகள் வாசல் கதவை தட்டோ தட்டு என்று தட்டின. கவர்ச்சியிலும் கண்ட்ரோல் இல்லாமல் நடிகை புகுந்து விளையாடியதால், இயக்குநர்களின் பிடித்தமான நடிகையாக இவர் இருந்தார்.
கட்டுமஸ்தான நடிகர்: கொடிகட்டி பறந்த இந்த நடிகை பல முன்னணி நடிகர்களுடன் கிசுகிசுவிலும் சிக்கினார். கட்டுமஸ்தான நடிகர் ஒருவருடன் இணைந்து நடித்த போது, இருவருக்கும் இடையே கேமிஸ்ட்ரி ஓர்க்அவுட்டாகிப்போக இருவரும் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். அந்த கட்டுமஸ்தான நடிகரோ ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, நடிகை ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். இந்த விவகாரம் கட்டுமஸ்தான நடிகரின் மனைவியின் காதுக்கு வர, கொழு கொழு நடிகையின் வீட்டுக்கே சென்று லெப்ட் அண்ட் ரைட் விட்டார்.
கழட்டி விட்டார்: இந்த விவகாரத்தால் நொந்துப்போன நடிகை பாலிவுட் பக்கம் சென்றார். அப்போது விளையாட்டு வீரர் ஒருவரின் நட்பு கிடைக்க அது காதலாக மாறி இருவரும் டேட்டிங் செல்லத்தொடங்கினர். இருவரின் இந்த சித்து விளையாட்டு எப்படியோ பத்திரிக்கையில் பேசு பொருளாக மாற, பயந்துபோன விளையாட்டு வீரர், கொழு கொழு நடிகை கழட்டிவிட்டு கம்பி நீட்டிவிட்டார்.
ஒண்டிக்கட்டையாக: இதனால், சினிமாவில் சில காலம் தலைகாட்டாமல் இருந்த இந்த நடிகைக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் இருக்கும் ஒரு நடிகருடன் நெருங்கிப்பழகினார். அந்த உறவும் முறிந்துப்போக இப்போது எதுவுமே வேண்டாம் என்று 48 வயதிலும் ஒண்டிக்கட்டையாக வாழ்ந்து வருகிறார். யாரையாவது திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி இருந்து இருந்தால், இந்த நிலைமையே வந்து இருக்காதே என தற்போது நடிகை புலம்பி வருகிறார்.


Click it and Unblock the Notifications











