ரெட் கார்டு போட்டாலும் பரவாயில்லை, வரமாட்டேன்... அடம் பிடிக்கும் அடைகோழி நடிகர்!
சங்க கட்டட பணிக்காக வெளிநாட்டில் நடக்கவிருக்கும் கலை நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மறுத்து விட்டாராம் ஹெட் நடிகர்.
தல நடிகர் மனதில் 'நான்லாம் படம் நடிக்கிறதே போனா போகுதுன்னுதான்' என்று நினைப்பார் போல... கோடிக்கணக்கில் பணம் போட்டு தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் கெஞ்சி கேட்டாலும் புரமோஷனுக்கு வர மாட்டார். சங்கம் சார்பில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் வர மாட்டார். அடைகோழி போல வெளியே வரவே மாட்டார். சங்கத்து பக்கம் பஞ்சாயத்துகள் போகும் அளவுக்கும் வைத்துக்கொள்ள மாட்டார். இன்னும் சில நாட்களில் சங்கத்து கட்டடம் கட்டுவதற்காக நிதி திரட்ட வெளிநாட்டில் கிரிக்கெட்டும் கலை நிகழ்ச்சியும் நடத்தவிருக்கிறது கோலிவுட்.

உச்ச நடிகர், உலக நாயகன், தளபதி என எல்லோரும் கலந்துகொள்ள இவர் மட்டும் முடியாது என்று சொல்லி விட்டாராம். ரெட் கார்டு போட்டாக் கூட பரவாயில்லை. வெளில வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறாராம்.
அதானே ரெட்டுக்கே ரெட் போடற தைரியம் யாருக்கு இருக்கு? அதான் இப்படி சொல்றாரு போல!


Click it and Unblock the Notifications











