வசூலை சொல்லாதீங்க... தயாரிப்பாளரை கேட்டுக்கொண்ட ஹெட்?
ஹெட் நடித்து பிராமிஸ் நிறுவனம் தயாரித்து சமீபத்தில் வெளியான படம் படுதோல்வி அடைந்தது. தயாரிப்பு நிறுவனமே முடங்கும் அளவுக்கு நஷ்டமாம். தனி அறையில் கதவை அடைத்துவிட்டு தயாரிப்பாளர் அழுவதாக சக தயாரிப்பாளர்கள் வருத்தத்துடன் சொல்லி வருகின்றனர்.
வாங்கிய வினியோகஸ்தர்கள் எல்லோருக்குமே நஷ்டம்தான். ஆனால் இதுவரை நஷ்டக் கணக்கை வெளியே சொல்லாமல் ரகசியம் காத்து வருகிறது தயாரிப்பு நிறுவனம். அதற்கு காரணம் நடிகரின் வேண்டுகோள்தானாம். மீண்டும் ஒரு கால்ஷீட் கொடுத்து சரி பண்ணாலும் பண்ணுவார் நடிகர் என்ற நம்பிக்கையுடன் அமைதி காக்கிறது நிறுவனம். அவர் ஏற்கெனவே அப்படிச் செய்து, ஒரு பிரபல தயாரிப்பாளரையே கைதூக்கி விட்டவர்தானே!
இருந்தாலும் பாதிக்கப்பட்ட வினியோகஸ்தர்கள் மூலம் எந்நேரமும் நஷ்டக் கணக்கு வெளியே வரலாம் என்கிறார்கள்.
தளபதி ஏன் சொந்தமா ரிலீஸ் பண்ண சொன்னார்னு இப்ப புரியுதா?


Click it and Unblock the Notifications











