»   »  வளர்ந்த நடிகையைக் கழற்றி விட்ட பிரமாண்ட நாயகன்

வளர்ந்த நடிகையைக் கழற்றி விட்ட பிரமாண்ட நாயகன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பிரமாண்ட படத்தில் ஜோடியாக நடித்த நாயகன் மற்றும் நாயகியின் காதல் முறிந்து விட்டதாக டோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பான பேச்சு அடிபடுகிறது.

ராணி வேடமா கூப்பிடுங்கள் இவரை என்று அனைவரும் சொல்லும் அளவிற்கு நல்ல உயரத்துடன் கூடிய அழகான நடிகை அவர். ராணியாக இவர் நடித்த படங்கள் நடிகர்களுக்கு ஈடாக வசூலில் சாதனை குவிக்க தற்போது நடிகையின் காட்டில் தான் அடைமழை பெய்து வருகிறது.

நாயகன் அப்படி இல்லை தெலுங்குப் படங்களில் இளம் நாயகர்களில் ஒருவராக இருந்த இவரை ஒரே நாளில் உலகறிய வைத்தது ஈ இயக்குனரின் பிரமாண்ட படம்.

தொடர்ந்து ஓவர் நைட்டில் இந்தியாவின் முன்னணி நடிகராக மாறினார் நடிகர். இவரும், நாயகியும் ஜோடியாக 6 படங்களில் நடித்தார்கள், இருவரின் ஜோடிப் பொருத்தமும் நன்றாக இருந்தது.

இருவரும் காதலிப்பதாக திரையுலகில் பேச்சு அடிபட்டு வந்தது, இருவரும் இதனை மறுக்கவில்லை. ஆனால் தற்போது நடிகையின் காதல் முடிவிற்கு வந்து விட்டதாக கூறுகின்றனர்.

நடிகருக்கு வேறு பெண் பார்த்து விட்டதால் இந்தக் காதல் முறிவிற்கு வந்து விட்டது என்று தற்போது பரபரப்பான பேச்சு அடிபடுகிறது.

English summary
Height Actress Love with Grand Actor, But Now the actress had come to the conclusion of love.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil