தம்பி தோத்ததுல தலை கால் புரியாம சரக்கு பார்டி வைத்த அண்ணன்.. மாமா காசுல மஞ்ச குளிச்சா எப்படி?

By Staff

சென்னை: பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்தும் தனக்கு பெரிதாக எந்தவொரு வெற்றியும் கிடைக்கவில்லை என நினைத்துக் கொண்டிருந்த அந்த அண்ணன் நடிகர் தனது தம்பியை சினிமாவுக்குள் வர வேண்டாம் என பல வருடங்களாக தடுத்துக் கொண்டும் அவருக்கு திருமணமும் செய்து வைத்து செட்டில் செய்து விட்டாராம்.

ஆனால், மாமாவின் தயவால் சிறு வயது முதலே தனக்கு இருந்த சினிமா கனவை தம்பி நடிகர் திருமணத்துக்கு பிறகு மனைவியை டார்ச்சர் செய்து அடம்பிடித்து நடித்த நிலையில், அண்ணன் நடிகருக்கு அது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்கின்றனர்.

gossip kollywood actors gossip

பேருக்காக தம்பிக்கு சப்போர்ட் செய்து வந்த அந்த நடிகர் தற்போது தம்பிக்கு வெற்றி கிடைக்காததால் தனியாக தனது நண்பர்களுக்கு தண்ணி பார்ட்டியே வைத்து தலை கால் புரியாமல் ஆட்டம் போட்டதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.

தம்பியை தட்டி வைத்த அண்ணன்: அப்பா சம்பாதித்து வைத்த பல கோடி ரூபாய் பணம் இருந்தும் தம்பியை சினிமாவுக்கு வரவிடாமல் பல வருடங்களாக தான் மட்டுமே ஹீரோவாக இருக்க வேண்டும் என பேராசையுடன் இருந்த அண்ணன் நடிகருக்கு திடீரென தம்பி பெரிய இயக்குநர் படத்தில் பல கோடி செலவில் படம் பண்ணப் போகிறான் என்றதுமே அதிர்ச்சியாகி விட்டது என்கின்றனர்.

மாமனார் தயவில் ஹீரோ: அண்ணன் அடக்கி வச்ச நிலையில், திருமணத்துக்குப் பிறகு மாமனார் தயவில் ஹீரோவாகியே தீருவேன் என்றும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என பெரிய இயக்குநரின் கை கால்களில் விழுந்து இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று சினிமாவில் தனியாக போராடியே தம்பி நடிகர் அறிமுகமானாராம். ஏற்கனவே மாமியார் தயவில் ஒரு நடிகர் ஹீரோவாகி கடைசியில் அந்த அசிங்கம் தாங்காமல் வீட்டில் வெடித்த சண்டை காரணமாக மனைவியை விட்டே பிரிந்த கொடுமை எல்லாம் தம்பி நடிகருக்கு யாரும் எடுத்துச் சொல்லவில்லை போல என கோலிவுட்டில் தம்பி நடிகர் பற்றிய பேச்சுக்கள் தான் அதிகம் ஓடிக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

பார்ட்டி வைத்த அண்ணன்: தம்பி எப்படியும் ஜெயித்து விடக் கூடாது என மனதளவில் அண்ணன் நடிகர் வேண்டிக்கொண்டு இருந்ததாகவும் தம்பியின் படம் அட்டு ஃபிளாப் ஆகி மிகப்பெரிய நஷ்டத்தை மாமனாருக்கு ஏற்படுத்திக் கொடுத்த நிலையில், 5 ஸ்டார் ஹோட்டலில் தனது திரையுலக நண்பர்களுக்கு தனியாக சரக்கு பார்ட்டியே வைத்து குடித்து கும்மாளம் போட்டிருக்கிறார் அண்ணன் நடிகர் என்கிற கிசுகிசுக்கள் கோலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X