இந்த பூனை பீரே குடிக்கும்.. லவ்வருக்குத் தெரியாமல் இளம் நடிகையுடன் வாரிசு நடிகர் போட்ட ஆட்டம்!

By Staff

சென்னை: இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதை இதுபோன்ற ஆட்களை பார்த்த பின்னர் தான் விவேக் சார் காமெடியில் வைத்திருப்பார் என்றே தோன்றுகிறது. வாரிசு நடிகர் சின்சியராக ஒரு பெண்ணை காதலித்து வரும் நிலையில், அந்த பெண்ணும் வாரிசு நடிகரை உயிருக்கு உயிராக காதலித்து வருகிறாராம்.

இருவரும் திருமணத்துக்கு முன்பே திருமணத்தை கடந்த உறவிலும் வாழ்ந்து வரக் காரணமே நடிகர் மீது அந்த பெண்ணுக்கு இருக்கும் அதீத காதல் தான் என்கின்றனர். ஆனால், காதலிக்கு கடுக்கா கொடுத்துவிட்டு இளம் நடிகையுடன் சீக்ரெட்டாக இரவு நேரத்தில் ஆட்டம் போட்டுள்ளார் வாரிசு நடிகர் என பகீர் கிளப்புகின்றனர்.

Heir Actor cheated his lover and doing private party with young actress
Photo Credit:

மேலும், இந்த விஷயம் தற்போது நடிகரின் காதலியின் காதுகளுக்கும் சென்று விட்டதாகவும் கூடிய சீக்கிரமே பிரேக்கப் அறிவிப்பு வரும் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

நடிகரை நம்பி லிவிங் டுகெதர்: தனது வீட்டை விட்டே வந்து நடிகருடன் தனியாக ஃபார்ம் ஹவுஸ் ஒன்றை வாடகைக்கு எடுத்து அந்த பெண் வாழ்ந்து வருகிறார் என்றும் நடிகர் மீது அவருக்கு பொல்லாத காதல் உள்ள நிலையில், நடிகர் என்ன மாதிரியான ஃபேண்டஸி கேட்டாலும் அனைத்துக்கும் ஓகே சொல்லி அவரை சந்தோஷப்படுத்தி வந்திருக்கிறாராம். ஆனால், திடீரென அந்த பெண்ணுக்கு இப்படியொரு துரோகத்தை வாரிசு நடிகர் செய்வார் என்பதை அவர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்கின்றனர்.

இளம் நடிகையுடன் வாரிசு நடிகர்: நடிகரை காதலித்து வந்த அந்த பெண் தனது சொந்த ஊரில் நடக்கும் உறவினர் திருமணத்துக்குச் சென்று வருகிறேன். உன்னோட ஷூட்டிங் ஏதும் பாதித்து விடக் கூடாது. நீ என்னோடு வர வேண்டாம் என சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். அந்த கேப்பை பயன்படுத்திக் கொண்டு இன்னொரு இளம் நடிகையை தனது ஃபார்ம் ஹவுஸுக்கு அழைத்து வந்து இரவு நேர பார்ட்டி ஒன்றை நடத்தி செம ஆட்டம் போட்டுள்ளாராம் அந்த வாரிசு நடிகர்.

இனிமே சேர முடியாது: நடிகர் போட்ட ஆட்டம் பற்றி நடிகரின் காதலி காதுகளை தோழி ஒருவர் கடித்து வைத்த நிலையில், செம அப்செட் ஆகிவிட்டாராம் அந்த பெண். இனிமேல் இந்த நம்பிக்கை துரோகியுடன் சேர்ந்து வாழ முடியாது என்றும் விரைவில் பிரேக்கப் செய்து பிரிந்து விட வேண்டியது தான் என்கிற முடிவில் இருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X