வருத்தத்தில் வாரிசு நடிகர்.. புதுசா எந்த படமும் கிடைக்கல.. அந்த தப்பான முடிவால இப்படி மாறிடுச்சே?

சென்னை: புதிதாக எந்தவொரு படமும் கிடைக்காததால் வருத்தத்தில் வாடி வருகிறாராம் அந்த வாரிசு நடிகர்.

ஈசியா பிரபலம் ஆகி விடலாம் என நினைத்து அவர் எடுத்த அந்தவொரு முடிவு தான் இந்த சூழ்நிலைக்கு அவரை தள்ளியது என்றும் கூறுகின்றனர்.

இந்நிலையில், வேறு வழி தெரியாமல் பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட அந்த படத்தை தற்போது தூசி தட்டி நடிக்க உள்ளாராம்.

மோதிரக் கையால் குட்டு

மோதிரக் கையால் குட்டு

குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப் பட வேண்டும் என அந்த பிரபல நடிகர் தன்னை போலவே தனது மகனும் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறக்க வேண்டும் என நினைத்து அந்த பிரபல இயக்குநர் படத்தில் அறிமுகப்படுத்தினார். ஆனால், முதல் கோணல் முற்றிலும் கோணலாக ஆரம்பமே சொதப்பலாகி விட்டது.

தவறான முடிவு

தவறான முடிவு

சீக்கிரமே சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கில் அந்த வாரிசு நடிகர் எடுத்த தவறான முடிவு காரணமாக அவரது சினிமா வாழ்க்கையே பெரும் சரிவுக்கு சென்று விட்டதாக கோடம்பாக்கத்தில் பல கோடாங்கிகள் குறி சொல்லி வருகின்றனர். அந்த மாதிரியான படங்களில் நடிக்க அவர் சம்மதித்தது தான் காரணமாம்.

அந்த மாதிரியான படங்கள்

அந்த மாதிரியான படங்கள்

இளம் இயக்குநர் விரித்த ஆசை வலையில் சிக்கி ஆபாச படம் போன்ற அந்த மாதிரியான படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்தது தான் இவர் செய்த பெரிய தவறு என்றும் நடிகைகளே அப்படி ஆடையை துறந்து நடித்தால் இங்கே மார்க்கெட் காலியாகி விடும் இதில் இவர் அப்படி நடித்து பெயரை கெடுத்துக் கொண்டார் என்று கூறுகின்றனர்.

மாற்ற முயற்சி

மாற்ற முயற்சி

அந்த அவப்பெயரை மாற்ற ஏகப்பட்ட தீவிர முயற்சிகளையும் நம்ம வாரிசு நடிகர் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். மீண்டும் வந்த இரண்டாம் பாக வாய்ப்புக்கும் கோடி கும்பிடு போட்டு வேண்டாம் என மறுத்து விட்டார். ஆனால், இன்னமும் இண்டஸ்ட்ரியில் அவர் மீது குத்தப்பட்ட அடல்ட் நடிகர் என்கிற முத்திரை நீங்க வில்லையாம்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

டிவிக்களில் இருந்தெல்லாம் சினிமாவுக்கு வந்து ஏகப்பட்ட இளம் நடிகர்கள் அசத்தி வரும் சூழலில் பிரபல நடிகரின் வாரிசுக்கு புதிதாக எந்த படத்திலும் வாய்ப்புகள் கிடைக்காமல் மறுக்கப்படுவதை பார்த்து மிகவும் வருத்தமடைந்திருக்கிறாராம் அந்த வாரிசு நடிகர். என்னதான் செய்வது என நினைத்த அவருக்கு திடீரென ஒரு சிறு வெளிச்சம் கிடைத்திருக்கிறதாம்.

பல ஆண்டுகள்

பல ஆண்டுகள்

பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த அந்த பழைய படத்தை தூசி தட்டி மீண்டும் எடுக்கும் முயற்சியில் அந்த படத்தின் இயக்குநர் வந்து பேச, இப்போதைக்கு சினிமாவில் இருக்கிறோம் என்பது மட்டுமே முக்கியம் என நினைத்த வாரிசு நடிகர் உடனடியாக அந்த படத்தில் மீண்டும் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

அந்த நடிகை

அந்த நடிகை

மார்க்கெட் இழந்த அந்த மங்களகரமான நடிகையுடன் மீண்டும் இணைந்து நடிக்க வாரிசு நடிகர் ஒப்புக் கொண்டாலும், மார்க்கெட் இழந்த இருவரும் இணைந்து நடித்தால் முதலுக்கு கூட மோசம் தான் என்றும் தயாரிப்பு தரப்பு கருதி வருவதால் அந்த படத்தை மறைமுகமாக தானே தயாரிக்கவும் வாரிசு நடிகர் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X