அப்பா எனக்கொரு சான்ஸ் கொடுப்பா.. அடம்பிடிக்கும் இளைய மகள்.. பார்த்து செய்வாரா பாஸ் நடிகர்?

By Staff

சென்னை: அப்பாவுக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில், பாஸ் நடிகரின் இளைய வாரிசு ஃபீல்ட் அவுட் நடிகையாக மாறி உள்ளார்.

அப்பா, அம்மா, அக்கா என குடும்பமே சினிமாவில் பிசியாகி வரும் நிலையில், தனக்கு மட்டும் சினிமா வாய்ப்பே கிடைக்கவில்லை என்றும் சிறு பட்ஜெட் படங்களில் கூட தன்னை நடிக்க அழைப்பதில்லை என அழுது புலம்பி வருகிறாராம்.

Heir actress begs her dad for next movie chance?

இந்நிலையில்;, அப்பாவுக்கு ஐஸ் வைத்து எப்படியாவது சினிமாவில் தனது முழு திறமையும் காட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம் வாரிசு நடிகை.

இப்பவும் அப்பா செம பிஸி: சினிமாவில் பல வேடங்களில் நடித்து பிரபலமான அந்த பாஸ் நடிகர் இப்பவும் கைவசம் பல பிரம்மாண்ட படங்களை வைத்துக் கொண்டு நடித்து வருகிறார்.

நடிப்பதை தாண்டி தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வரும் அவர், பல இளம் முன்னணி நடிகர்களை வைத்து படங்களை தயாரித்து வருகிறார்.

பெரிய வாய்ப்புகளை அள்ளும் அக்கா: அப்பாவை போலவே அக்காவும் பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு பின்னரும் நடித்து சாதித்து வருகிறார். பான் இந்தியா நடிகையாக பல மொழிகளில் லீடு ஹீரோயினாக அக்கா வலம் வரும் நிலையில், தங்கைக்கு மட்டும் பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை என்பது தான் பெரிய சோகமாக மாறி உள்ளது.

அதற்கான மெனக்கெடல்களை தனியாளாக செய்யாமல் எப்போதுமே அப்பா மற்றும் அக்காவின் தயவையே நாடி வரும் இளைய மகள் எங்கே முட்டிப் பார்த்தும் கிடைக்கவில்லை என்பதால் மீண்டும் அப்பாவிடமே ஐஸ் வைக்க ஆரம்பித்துள்ளாராம்.

ஒரு படமும் இல்லை: ஆனால், அதே நேரம் அந்த பெரிய நடிகரின் இளைய மகளுக்கோ சினிமா வாய்ப்பு கொஞ்சம் கூட கிடைக்கவில்லை என்கின்றனர். நடித்த சில படங்களும் அப்பாவின் மூலமாகவே கிடைத்த படங்கள் தானாம். டாப் ஹீரோக்கள் படங்களில் சிபாரிசு மூலமாக சான்ஸ் கிடைத்தாலும் செகண்ட் ஹீரோயின் சான்ஸ் தான் கிடைப்பதால் அது போன்ற ரோல்கள் வேண்டாம் என உதறிய நிலையில், ஒரு வாய்ப்பும் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறாராம் அந்த வாரிசு நடிகை.

அம்மா, அப்பா, அக்கா என அனைவரும் சினிமாவில் பிசியாக உள்ள நிலையில், தனக்கு ஒரு சிறு பட்ஜெட் படம் கூட கிடைக்கவில்லையே என்கிற கவலையில் அப்பாவிடம் கடைசியில் வேறு வழியில்லாமல் தஞ்சமடைந்துள்ளார் என்கின்றனர்.

அப்பாவுக்கு ஐஸ்: அப்பா தயாரிக்கும் படத்தில் அந்த நடிகருடன் ஜோடிப் போட்டு நடிக்கும் வாய்ப்பை எப்படியாவது தட்டிப் பறிக்க வேண்டும் என்கிற முடிவில் வாரிசு நடிகை திட்டங்களை தீட்டி வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இளைய மகளுக்காக அப்பா கருணை காட்டி அடுத்ததாக தயாரிக்க உள்ள படத்தில் அந்த நடிகருக்கு ஜோடியாகவோ அல்லது செகண்ட் ஹீரோயின் கதாபாத்திரத்தையோ கொடுப்பாரா? என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.

இயக்குநர் மற்றும் நடிகர் உடன் இதுபற்றிய பேச்சுவார்த்தையை தனது மகளுக்காக தற்போது அப்பா நடிகர் செய்து வருகிறாராம். கூடிய விரைவிலேயே அந்த அறிவிப்புகள் வெளியாகி இளைய மகளை இன்புறச் செய்யும் என தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X