அம்மா பெயரையே கெடுத்துட்டா.. வாரிசு நடிகைக்கு விழுந்த டோஸ்.. குடும்பத்திலேயே அசிங்கம்?
சென்னை: அவளோட அம்மா இருந்த வரை இதுக்காகத்தான் சினிமாவில் நடிக்க விடாமல் தடுத்திருப்பார் போலத் தெரிகிறது என வாரிசு நடிகையை குடும்ப உறுப்பினர் ஒருவரே படு மோசமாக விமர்சித்திருப்பது சினிமா வட்டாரத்தில் பெரிய பரபரப்பை எழுப்பியுள்ளது.
வெளிநாடுகளில் நடிகைகள் படத்தின் இயக்குநர் சொன்னால் நிர்வாணக் காட்சிகளில் கூட நடிக்கின்றனர். அதையெல்லாம் ஓடிடியில் வாயை பிளந்துக் கொண்டு பார்க்கும் இதே ரசிகர்களும் மக்களும் தான் நம்ம ஊரில் கவர்ச்சியாக ஹீரோயின்கள் நடித்தாலே பெரிய பஞ்சாயத்து பண்ண ஆரம்பித்து விடுகின்றனர்.

சினிமா ஒரு பொழுதுபோக்கு அம்சம் தான் என்றும் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை தெரிந்து தான் நடிகைகள் நடித்து வருவதாகவும் அவங்க வீட்டிலேயே அதை பெரிதாக்கவில்லை. உறவினர்கள் போர்வையில் ஏன் தேவையற்ற சத்தத்தை எழுப்புகிறீர்கள் என சகோதரர் சத்தம் போட்டு விட்டார் என்கின்றனர்.
அம்மா பெயரை கெடுத்துட்டா: வாரிசு நடிகை நடிக்க வந்ததே உறவினர் சிலருக்கு பிடிக்கவில்லை என்கின்றனர். நடிகையின் அப்பாவுக்கு 2 குடும்பங்கள் உள்ள நிலையில், இன்னொரு குடும்பத்தினர் தங்கள் பெயரை கெடுத்தால் கூட பரவாயில்லை அவருடைய அம்மா பெயரையே கெடுத்து விட்டார் என நடிகை பற்றி தீவிரமாக பேசத் தொடங்கியிருப்பது குடும்பத்தில் குண்டை தூக்கிப் போட்டுள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
குடும்ப உறவினர்கள் விளாசல்: ஒரு சில நடிகைகள் தான் கிளாமர் காட்டாமல் நடிப்புத் திறமையை மட்டுமே வெளிக்காட்டி ஸ்கோர் செய்வார்கள். ஹாலிவுட்டில் நடிகைகள் பலரும் முழு நிர்வாணமாகவே நடிக்கின்றனர். ஆனால், அவர்களின் குடும்பத்தில் எல்லாம் அதை பெரிதாக பேசுவதில்லை என்றும் அதையெல்லாம் ஓடிடியில் ஒளிவு மறைவுடன் பார்த்துக் கொண்டு சந்தோஷப்படும் இங்குள்ளவர்கள் நடிகைகள் சற்றே கவர்ச்சி தூக்கலாக நடித்து விட்டால் கலாச்சார காவலர்களாக மாறிவிடுவதாக சகோதரர் பொங்கி எழுந்துவிட்டாராம்.
சகோதரர் பேரிலேயே சர்ச்சை: ஏற்கனவே வயதான நடிகையுடன் உறவு கொண்ட விவகாரத்தில் நடிகையின் சகோதரர் பேரிலே ஆயிரத்தெட்டு சர்ச்சைகள் வெடித்த நிலையில் தான் அவர் பிரேக்கப் செய்தே பிரிந்தார் என்றும் தற்போது சகோதரி பற்றி யாரும் தப்பாக பேச வேண்டாம். அவளுக்கு பிடித்ததை அவள் செய்யட்டும் எனக் கூறியதாக பரபரப்பு கிளம்பி உள்ளது. யார் என்ன சொன்னாலும், அதையெல்லாம் கண்டுக்கொள்ளக் கூடாது என சினிமாவில் நடிக்க வந்ததுமே புரிந்துக் கொண்ட நடிகை எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல் அடுத்த படத்தில் இதை விட எப்படி கவர்ச்சியாக நடிக்கலாம் என்கிற பிளானை போட்டு வருகிறார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications