ரொம்ப சீப் பப்ளிசிட்டியால இருக்கு.. அதுக்காக இப்படியெல்லாமா ஸ்டேட்மென்ட் கொடுப்பாங்க?
சென்னை: பிரபல நடிகரின் வாரிசு, கோலிவுட்டில் தானும் நடிக்கிறேன் என சுற்றித் திரிந்து வருகிறார்.
சமீபத்தில், தனக்கும் பாலியல் பிரச்சனை கொடுத்தாங்க, என அந்த நடிகை பேசியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி, வைரலானது.
ஆனால், இவ்வளவு நாள் கழித்து, இப்போது அந்த வாரிசு நடிகை அந்த பிரச்சனை குறித்து பேச இதுதான் காரணம் என்கின்றனர் கோலிவுட் வாசிகள்.

ஓடவில்லை
அந்த பிரபல நடிகர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ள நிலையில், அவரது மகள், நாயகியாக நடித்த எந்தவொரு படங்களும் கோலிவுட்டில் ஓடவில்லை. வாரிசு நடிகை என்பதாலும், அந்த நடிகரின் உதவியாலும், பல படங்களில் நடித்தும் எல்லாமே சொதப்பல் தான்.

வில்லி
ஹீரோயின் கேரக்டர் உங்களுக்கு செட் ஆகலை, புரிஞ்சுக்கோங்க என எத்தனையோ இயக்குநர்கள் சொல்லியும், நடிச்சா நாயகியாத்தான் நடிப்பேன் என பல படங்களை ஃப்ளாப் படங்களாக மாற்றிய அந்த நடிகை, ஒரு கட்டத்துக்கு மேலே, வில்லி அவதாரமும் எடுத்தார். அந்த கேரக்டர் தான் அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது என்ற பாராட்டுக்களும் கிடைத்தது.

காதல் பிரச்சனை
அந்த வி நடிகருடன் இந்த வாரிசு நடிகைக்கு காதல் இருப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் வதந்திகள் பரவின. இருவரும் இணைந்து சில பல படங்களிலும் நடித்ததால், அது மேலும் ஊர்ஜிதமானது. ஆனால், கடைசியில், வாரிசு நடிகையை கழட்டி விட்டு, வசதியான பார்ட்டியை அந்த நடிகர் தேடி பிடித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

படுக்கைக்கு அழைத்தனர்
கோலிவுட்டில் புதிய படங்களில் வாய்ப்புகள் இன்றி, மார்க்கெட் காலியான அந்த நடிகை, தற்போது, தன்னையும் படுக்கைக்கு அழைத்தனர். கோலிவுட்டில், எந்த பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை என ஆவேசமாக பேசி, தனது பக்கம் மக்களின் கவனத்தையும் பரிதாபத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளார்.

எல்லாம் இதுக்குத்தானா
அந்த வாரிசு நடிகை நடிப்பில் ஏற்கனவே உருவாகி, வெளியாக முடியாமல் தவித்து வந்த அந்த படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் தான், இவ்வளவு நாள் கழித்து, தற்போது, இந்த பாலியல் பிரச்சனையை விளம்பர நோக்கத்திற்காக கிளப்பியுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.

சீப் பப்ளிசிட்டி
பொதுவாக தங்கள் படங்கள் வெளியாவதற்கு முன்னதாக, நடிகைகள் அந்த படத்தை மக்களிடையே கொண்டு சேர்க்க, நேரடியாகவோ, மறைமுகமாகவோ சில பல சீப் பப்ளிசிட்டியை செய்வார்கள், அதே பழைய டெக்னிக்கை தான் இந்த வாரிசு நடிகையும் தற்போது கையாண்டு வருகிறார் என்றும், படம் ரொம்ப சுமாராக இருப்பதால் தான் இப்படி ஒரு நெகட்டிவ் பப்ளிசிட்டி என்றும் கிசுகிசுக்கத் தொடங்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











