Don't Miss!
- News
எடப்பாடி கேட்ட "இரண்டுமே" கிடைக்கல.. ஓபிஎஸ் ஜீரோ இல்லை.. புட்டு புட்டு வைத்த புள்ளி.. என்னாச்சு?
- Finance
PF கணக்கு வைத்துள்ளீர்களா..? பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்பு.. வரி சலுகை..!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கை முழுவதும் பழிவாங்க துடிப்பார்களாம்... இவங்கள எப்பவும் நம்பாதீங்க...!
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Sports
பார்டர் கவாஸ்கர் கோப்பை - அதிக போட்டிகளில் வென்றது யார்? அதிக ரன்கள் அடித்தது யார்.. முழு விவரம்
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வெளிநாட்டிலேயே டேரா போட்ட வாரிசு நடிகை.. ரகசியமாக அப்படியொரு விஷயம் நடக்குதாம்?
சென்னை: பிரபல நடிகரின் வாரிசு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நிலையில், சமீப காலமாக பெரிய படங்கள் ஏதும் கிடைக்காமல் தவித்து வருகிறார்.
காதலரையும் கொஞ்ச நாட்களாக பிரிந்து வரும் அந்த நடிகை திடீரென வெளிநாட்டில் சில மாதங்களாக டேரா போட்டுள்ளார்.
இந்நிலையில், வெளிநாட்டிற்கு என்ன காரியமாக நடிகை கிளம்பிச் சென்றார் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன.
ஹன்சிகாவின் கோலாகல மெஹந்தி பங்க்ஷன்.. என்ன கலர்புல்லான போட்டோஸ்!

படமே ஒடாது
அப்பாவின் பெயரை அப்படியே காற்றில் பறக்கவிடுவது போல இந்த நடிகை நடித்த எந்த படமும் பெரிதாக ஓடியதே இல்லை என்கிற பெயரை கோலிவுட்டில் வாங்கி விட்டார். அப்படி இருந்தும் சில படங்கள் கிடைத்தாலும், அந்த படமும் சொதப்பி விடுகின்றன. மற்ற மொழிகளிலும் பெரிய நடிகரின் வாரிசு என்பதால் இவருக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

செகண்ட் பிரேக்கப்
வாரிசு நடிகை ஏற்கனவே வெளிநாட்டினர் ஒருவரை காதலித்து திருமணம் வரை சென்ற நிலையில், கடைசி நேரத்தில் நடிகை குறித்த சில விசயங்கள் தெரிந்த நிலையில், கழட்டி விட்டு சென்று விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டன. காதல் தோல்வி பிரிவால் சில ஆண்டுகள் சினிமாவில் நடிப்பதையே விட்டு விட்டு ரெஸ்ட் எடுத்து வந்த அந்த நடிகைக்கு புதிய காதல் மலர்ந்தது.

காணாமல் போன காதலர்
இரண்டாவது காதலருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த அந்த நடிகை சமீப காலமாக அவருடன் காட்சி கொடுப்பதை நிறுத்தி விட்டு சோலோவாக போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். இருவருக்கும் இடையே பிரேக்கப் ஆகி விட்டது என்றும் நடிகையை விட்டு இந்த காதலரும் பிரிந்து சென்று விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெளிநாட்டில் டேரா
இந்நிலையில், நடிகை சில மாதங்களாகவே வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் அங்கேயே செட்டில் ஆகி விட்டாரோ என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், நடிகை ஏன் தொடர்ந்து அங்கேயே இருந்து வருகிறார். அங்கே ஏதாவது வெப்சீரிஸில் நடிக்கிறாரா? என்றெல்லாம் கேள்வி கிளம்பிய நிலையில், தற்போது ஷாக்கிங்கான சில தகவல்கள் கசிந்துள்ளன.

ரகசிய சிகிச்சை
நடிகைக்கு ஏற்கனவே உடல் முழுக்க ஏகப்பட்ட நோய்கள் உள்ள நிலையில், அதிலிருந்து முழுவதுமாக குணமடைய ஸ்பெஷல் சிகிச்சையை வெளிநாட்டில் செய்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. அதன் காரணமாகத்தான் நடிகை தாயகம் திரும்பவில்லை என்றும் சீக்கிரம் பழையபடி எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் குணமாகி கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.