»   »  அவரோடெல்லாம் நடிக்க முடியாது வாரிசு நடிகையின் பிடிவாதம்

அவரோடெல்லாம் நடிக்க முடியாது வாரிசு நடிகையின் பிடிவாதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி நடிகருடன் நடிக்க வந்த வாய்ப்பை, வாரிசு நடிகை மறுத்தது தான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக்.

கும்கி நடிகரின் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அந்த வாரிசு நடிகை. அறிமுகப் படம் எடுபடவில்லை என்றாலும் சங்கத் தலைவருடன் இணைந்து நடித்த படம் நடிகையைத் தூக்கி விட்டது.

அதனால் அடுத்தடுத்த படங்களில் நடிகையை ஒப்பந்தம் செய்ய போட்டி போட்டு வருகின்றனர். தற்போது தளபதி மற்றும் ஒல்லி நடிகரின் படங்களில் வாரிசு நடிகை நடித்து வருகிறார்.

இந்நிலையில் சாமி நடிகரின் அடுத்த படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நடிகரின் வயதைக் காரணம் காட்டி வாரிசு மறுத்து விட்டாராம்.

இதனால் நொந்துபோன படக்குழு தற்போது ஸ்வீட் ஸ்டால் நடிகையை அதிக சம்பளம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.

நடிகையின் மறுப்புதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட்- டாபிக்.

English summary
Sources said Heir Actress got Leading actor movie but she Reject this Opportunity.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil